என் மசாலா ரசனைகளுக்கு சிவாஜி, வாரணமாயிரம், பில்லா, போக்கிரிகள் வந்தாலும்..
உணர்வுகளை உரசும் உலக சினிமா தரவரிசையில் தமிழில் வெகு சில சினிமாக்கள் தான் வரும்..அது வெற்றிகரமாக ஓடுதோ இல்லையோ அது கண்டிப்பாக பலரை அதன் உணர்வு குவியல்களில் சிக்கவைத்து பிரமிப்பூட்டும், அதற்காகவே இது போன்ற படங்களுக்கு நான் காத்திருப்பதுண்டு.. அந்த வரிசையில்...மூன்று வருடமாக...அந்த படத்தின் தயாரிப்பாளர் மட்டுமில்லை இயக்குனர் பாலாவின் ரசிகரான நானும் தான்..
படம் : நான் கடவுள்!
என் காத்திருப்புக்கு மூன்றே மூன்று காரணங்கள் தான்..
உணர்வுகளை காட்சிகளாய் பதிவும் செய்யும் பாலாவின் இயக்கம்..
ஜெயமோகனின் ஏழாவது உலகமெனும் இலக்கிய நாவலின் ஒரு பகுதியை அவருடைய அனுமதியுடன் பாலாவே திரைகதையாய் எழுதி, அதற்கு வாசம் சேர்க்க வரும் வசனங்களை, இலக்கிய உலகின் இந்நாள் பெரிய நம்பிக்கையான ஜெயமோகனையே முதன் முதலில் திரைத்துறைக்கு அழைத்து வந்து எழுதவைத்தது!
உயிரையே மீண்டும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் இசையின் ஆதிமூலம் இளையராஜாவின் இசை..
இங்கு மட்டுமில்லை இந்தியில் ஆமிர் கான், அபிஷேக் பட்சான் முதல் பலரும் பாலாவின் இயக்கத்தில் நடிக்க தவம் கிடக்கிறார்கள்.. அஜித்துக்கு பாலா செய்தது துரோகம் தான்.. கமல்ஹாசனின் வாரிசாக அஜித்தை இந்த படம் மாற்றி இருக்கும்.. யார் கண் பட்டதோ... ஆர்யாவுக்கு அடித்தது யோகம்.. இந்த படத்திலும், இனிமேல் நடிக்க போகும் படத்திலும் அர்யவிடமும் நடிப்பை எதிர்பார்க்கலாம்..
கதை..நாம் வாழும் இந்த சமுகத்தில் கடைசி மனிதர்களாக வாழும் .. பிட்சைக்காரர்களின் உரையவைக்கும் உலகத்தை பற்றியது தான் கதை. 'எழாவது உலகம்'..நாவல் முழுவதும் படமாக எடுக்க முடியாது...நாவலை படிக்க படிக்க கனத்து விடும் மனசு.. படித்தவர்களுக்கு நான் சொல்வது நன்கு புரியும்.அதனில் ஒரு பகுதியை கதையில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் வாயிலாக கதையை காசி(வாரனாசி)யில் ஆரம்பித்து தமிழகத்துக்கு பயணம் செய்கிறது பாலா எழுதிய நான் கடவுள். அதுவும் பாலாவின் பதிவுகளை சொல்லவே வேண்டாம் கண்டிப்பாக காட்சிக்கு காட்சி பதற வைக்கும்...
இசைஞானி படத்தை பார்த்து அழுதே விட்டாராம்.. பின்னணி இசையில் தற்போது உயிரூட்டி கொண்டு இருக்காராம்..
தேசியவிருதுகளின் இலக்கில் ... பொங்கலுக்கு.. என் அண்ணாச்சி பாலாவின் நான் கடவுள்!
இந்த படம் தான்!, என்னை மீண்டும் புகைபடங்கள் எடுக்க தூண்டியது. சிறுவயதில் தெரியாத்தனமாய் பள்ளியில் ஆந்திர மாநிலத்தின் சிறுவர்களுக்கான சிறந்த பரிசு பெற்ற ஒரே நம்பிக்கைதான், மற்றபடி அதன் தொழில் நுட்பம் எதுவுமே எனக்கு தெரியாது என்பதே என் மனதின் உண்மை. இருந்தாலும் இதன் மேல ஆசை வளர்ந்தது!
புதுமையாக இத்துறையில் எதாவது செய்யலாம் என்கின்ற அதிகபிரசங்கித்தனம் எல்லாம் இல்லாமல், முதலில் எல்லோரும் பார்த்து பழகிய படங்களை எடுத்து பார்போம் என்றே ஆரம்பித்தேன், என் ஒளியின் பயணத்தை. அதற்கு சாட்சிள், இன்னும் என் பழைய பயணக்குறிப்புகள் அழிக்க படாமல், அப்படியே என் flickr தளத்தில் இருக்கிறது. ஒவ்வொரு படமும் இன்னொரு தளத்திற்கு என்னை கொண்டு சென்றது, நான் ஒழுங்காக அப்போதாவது ஒளிப்பதிவை கற்று கொள்வேன் என்று, இல்லை என்று சொல்லும் அப்பாவி மக்கு மாணவனாக தான், இன்றும் நான்.
என்னை எப்படியாவது, இந்த துறையில் பெயாரெடுக்க வைக்க வேண்டும் என்று என் நண்பர்கள் மற்றும் என் விமர்சகர்கள் இன்னும் அரும்பாடுப்படுகிறார்கள்.. பார்போம் என்று எதிர்காலத்தை நோக்கி நானும், என் காமெராவும்...
எங்கள் நட்புகுகளை.. எங்கள் மொழிகளை.. எங்கள் மதங்களை.. எங்கள் வாழ்கையை..
இணைக்கும் எங்கள் இந்தியா..
என்று சாதிக்க வேண்டும் மென்றால்..?
இதற்கு ஒரே treatment கட்டிப்புடி வைத்தியம் தான்!
நன்றி AR ரஹ்மான்.. 'Jiya Se Jiya' பாடல்.... Connections ஆல்பத்திலிருந்து... (AR ரஹ்மானின் Connections என்கிற இந்த இசை ஆல்பத்தை நோக்கியா மொபைல் நிறுவனமும் பாரத்பாலா நிறுவனமும் இணைந்து தாயரித்துள்ளது.
'Jiya Se Jiya' என்பது தான் Connections ஆல்பத்தின் ஒன்பது பாடல்களில் முக்கியமான தாளம் தட்டும், இதயத்தை உணர்வோடு சேர்த்து கட்டும் , நட்பின் ஆழத்தை உணர்த்தும் பாடல். இந்த வீடியோவை ஆஸ்திரேலியாவின் Juan Mann's Free Hugs( இலவசமாக கட்புடிச்சுக்கலாம்) பிரச்சார அமைப்பின் தத்துவங்களின் அடிப்படையில், இந்தியா முழுவதும் நிறைய பேரை கட்டிபுடிக்க வைத்து படமாகியுள்ளார் இதனை இயக்கிய கனிகா மயர். இது தற்போது இந்தியா மட்டும்மள்ளாது youtube லும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது!)
குசேலன் குழப்படி மூலம் TRP கிடைத்ததில், அதிகம் லாபம் பார்த்த சன் டிவி குழுமம் இன்று சூப்பர்ஸ்டார் நடிக்கும் மற்றும் ஷங்கரின் கனவு படமான எந்திரனை தயாரிக்கிறது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது . உப்புமா படத்திற்கேல்லாம் அதிகமாகவே பாலிஷ் போட்ட சன் டிவி.. இன்று, பிரமாண்டமான பாலிஷ் இயக்குனருடன் இணைந்து இருக்கிறது. சந்தோஷம்..ரஜினி ரசிகர்களுக்கு அதிகம் இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் சன் டிவி குழுமம் தயாரிப்புக்கு முதல் சந்தோஷ வெற்றி இது தான். கலைஞரின் உண்மையான வாரிசு என்றால் நான் தான் என்று மீண்டும் நிருபித்த கலாநிதி மாறனின் முதல் திரையுலக வெற்றி..
சூப்பர்ஸ்டாருக்கும் இது தந்திர வெற்றி தான்.. சண்டைகாரனை காலில் விழ வைத்தது.
மொத்தத்தில் சன்னின் திருஸ்டி சூப்பர்ஸ்டாருக்கு கழிந்தது இனிமேல் சூர்யநட்சத்திரமாக திகழ்வார் என்று கோடம்பாக்கம் ஆரூடம் சொல்கிறது..
தெலுங்கு படமான "கிங்" மற்றும் நமது தமிழில் வரவிருக்கும் "என்னை தெரியும்மா" படங்களின் பாடல்கள் தான் என் Winampல் தற்போது சுழல்கிறது.. அதனை உங்களுக்காக இங்கே!
படம்...தெலுங்கு "கிங்" ....நடிகை மம்தா மோகன்தாஸ் பாடியது என்னை அடிமையாக்கிவிட்ட குரல்..
தேடல் இல்லா தெருவில் பயணித்து கொண்டு இருந்த நான் தெரியாத்தனமா கோவிலுக்கு வந்தேன்...
அழகு பைத்தியமாய் நின்று கொண்டு இருந்தாய் உன் அம்மா துணையுடன்..
உன்னை முதன்முதலில் பார்த்தபோது பரிதபமாக என் உள்ள தட்டில் உன் ஏஞ்சல் இதயத்தை பிச்சையிட்டு சென்றாய்!
வந்த வரை லாபம் என்ற எண்ணத்தில் இருந்தேன்.. உன் இதயம் வந்த நேரம் உன் பைத்தியம் என்னையும் பிடித்துவிட்டது நின்ற இடத்திலேயே நின்றேன் பைத்தியமாக.... உன் கிறுக்கு பிடித்த இதயமாக!
வேண்டுதலோ என்று அய்யர் தவறாக நின்னைத்து விட்டார் போலும் அம்மன் குங்குமம் நெத்தியிலே பூசி விட்டார்..
hmmm hmmm தெளியவே இல்லை அவர் கோயில்லை பூட்டி கொண்டுயிருந்தார்.. நான் வெளியில் வந்தேன் கடைசியாக உன் பைத்தியமாக!
எனக்கு மழை நாட்களில் நனைவது என்றால் கொள்ளை ப்ரியம்! “மழையில் எருமை மாடு மாதிரி நனைந்து வருகிறாயே” என்று அடிக்கடி அம்மா திட்டுவாங்க அப்போது.. சந்தோஷத்தில் சிரித்துக் கொள்வேன்!
இப்போதும்...
அப்படி தான் சிரித்துக் கொள்கிறேன் சாதரண நாட்களில் கூட மாலை நேரத்தில் காலேஜ் பஸ்சில் இறங்கி நீயும் அது போல அசைந்து வருவதை கண்டு!
அமைதியாகவே எனை மெல்ல மெல்ல அடிமை செய்துவிட்டாய் நானும் உன் ஆக்கிரமிக்கும் கண்களுக்கு சமாதி நிலை அடைந்து நிற்கிறேன்..
எதற்காக...
தேவதையின் (Kate winslet போன்ற) Lipstick போடாத சிவப்பு இதழ்கள் என் காதை குறும்பாக கடிக்கும் போதும் என் இதழ்களின் ஆக்கிரமிப்பை அடாவடியாக மறுக்கும் போதும் உன் சேட்டை செய்யும் முத்தத்திற்க்காகவே எத்தனை வருஷமெல்லாம் காத்தியிருக்றேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே தான் இருக்கிறேன் ஜட்டி போட்ட என் அக்காவின் குட்டி மகளுக்கு!!