Showing posts with label kaathal_vasanangal. Show all posts
Showing posts with label kaathal_vasanangal. Show all posts

Saturday, October 24, 2009

matha matha katha katha|மத மத..கத கத..



மத மத..ன்னு அவ..
கத கத..ன்னு நான்..
ம..மதம் பிடித்த
க..கலவரமான காதல்..

Monday, June 29, 2009

seekiram||சீக்கிரம்!!


எவ்வளவு  நேரம்மடி
இம்சையரசி
என் இதழ் பக்கம் மௌனவிரதம் இருப்பாய்..
சட்டென்று விரதத்தை முடி..
மொத்தத்தில்..
முத்தத்தில்.. எனக்கு
மோட்சம் கொடு.. சீக்கிரம்! !

nanainthaen||நனைந்தேன்?


அழகாக நீ அணைத்ததில்
இதமாக நனைந்தேன்
உன் முத்த மழையில்?!
சரியாக ஞாபகமில்லை
எங்கே இன்னொரு முறை
எனக்காக!

my symphony|| என் சிம்போனி


நான் இறுக்கி பிடித்து அணைத்ததில்
அவளின் சிணுங்கல்கள் சிம்போனியாக
சிதறுக்கிறது..என்னுள்
அவளின் அருமையான இசையை
மீண்டும் மீண்டும்
மீட்டிக் கொண்டு இருக்கிறேன்..  என் சிம்போனியாக!

Wednesday, December 31, 2008

யார் முதலில் சொல்வது..?




காதலை யார்
முதலில் சொல்வது
என்ற தயக்கத்தில்..இன்னும் நாமிருவரும்!

அம்மா! என்று
உன் கன்னத்தை கடித்து
உன் கனவை திறந்தான்
நம் சுட்டி மகன்!

அடிக்கடி
என்னை முந்திக்கொள்கிறான் அவன்!
என்ற பொறாமையில்
நான்..நிஜத்தில்!

(இன்றைய கனவில் என் எதிர்கால வாழ்க்கை !)

Sunday, December 21, 2008

Yaar thadupaargal | யார் தடுப்பார்கள்?!




யுத்தம் செய்ய
உலகம் தடுக்கலாம்!

நாம் முத்தம் செய்ய
யார் தடுப்பார்கள்?!


(நம் வருங்கால கனவு டூயட்டின் பாடல் வரிகள் இது!)

ஏன்...இப்படி பார்த்தே..?



ஏன்...?
இப்படி பார்த்தே..!
என்னை சாக அடிகிறாய்..?

வரம் வாங்கி
மறுபிறவி எடுத்துவந்தாலும்..
என்னை தொடர்கிறது...
உன் பார்வை!

இதய குறிப்பு!:
எனக்கும் சந்தோசம் தான் அடிக்கடி இப்படி சாவதில்!

மயக்கம்!



நீ என் இசையில் மயங்குகிறாய்!
நான் உன்னில் மயங்குகிறேன்!
நம் வாழ்க்கை காதலில் மயங்குகிறது!

என் ஜாதகத்தில்...




என் ஜாதகத்தில்...
ஜென்ம சனி வந்து இருக்கிறதாம்!

அதுவும் ஜென்ம சனியில்..
காதலாம்!

உணர்ந்தேன்...
நீ என்னை பார்த்தபோது!

உன் ஜாகத்தை
பார்க்கச் சொல்!
..நான் வந்து இருப்பேன்!

பரிகாரம்:
உடனே நம் கல்யாணத்தில் தானாம்!

Friday, December 19, 2008

..மயங்கினேன்..சொல்ல தயங்கினேன்!




நான் மயங்குகின்ற காதல் கண்கள்!
எனக்கு சொந்தமான
அதே கண்கள்!
பாகம் 2!

Wednesday, December 17, 2008

என் இசை மனதில் இன்று..

தெலுங்கு படமான "கிங்" மற்றும் நமது தமிழில் வரவிருக்கும் "என்னை தெரியும்மா" படங்களின் பாடல்கள் தான் என் Winampல் தற்போது சுழல்கிறது.. அதனை உங்களுக்காக இங்கே!



படம்...தெலுங்கு "கிங்" ....நடிகை மம்தா மோகன்தாஸ் பாடியது
என்னை அடிமையாக்கிவிட்ட குரல்..



படம்...தெலுங்கு "கிங்" ....பாடகி உஜ்ஜைனி பாடியது


"என்னை தெரியும்மா" படத்தில் நடிகர் சிம்பு பாடியது



பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடியது

Sunday, December 14, 2008

முதலிலேயே ஆஜர் ஆகிக்கிறேன் !!



(சத்தியமா இவை கவிதைகளே அல்ல ... )

நான் இங்கு எழுதியவைகள்
அனைத்தும்
கண்டிப்பாக கவிதைகள் அல்ல
காதல் தலைக்கேறிய பித்தம் தான்
உணர்ந்ததை மறைமுகமாக
உளறி இருக்கிறேன்..

பல இடத்தில் கவிதை என்று சொல்லி இருந்தாலும்
அவையனைத்தும் அடுக்கு மொழி வசனங்கள் தான்!



முதலிலேயே ஆஜர் ஆகிக்கிறேன் !!



முதல் நாள் நினைதவை
கனவில் வரும் என்று
Sigmund freud சொல்லி இருக்கிறார்

முன்பு எங்கோ படித்தவை
இன்று இங்கு கவிதையாய்
வந்து இருக்கலாம்
அதை நான் மீண்டும் எழுதி இருக்கலாம்
என் மொழியில்..

மன்னிப்பு கேட்க மாட்டேன்
இவற்றை ஏற்கனவே இயற்றிய கவிஞர்களே!

கவிதை எழுதுவதே
காதலை கடத்துவதற்கான
எளிய வழி என்பதனால்!

காதல்..



வரமிருந்து நீயும் நானும்
வாங்கிய
சந்தோஷ சாபம்!

பழைய காதல் recycle ஆகியது



பழைய காதல்
இது
என் கால குப்பைதொட்டியில்
recycle ஆகும்
என்ற நல்ல நம்பிக்கைய்யில்
மீண்டும் ஒரு அழகான குழப்பதை
காதலிகின்றது
என் வாழ்க்கை!

கடைசியாக பைத்தியம் பிடித்தது..




தேடல் இல்லா தெருவில்
பயணித்து கொண்டு
இருந்த நான்
தெரியாத்தனமா கோவிலுக்கு வந்தேன்...

அழகு பைத்தியமாய் நின்று
கொண்டு இருந்தாய்
உன் அம்மா துணையுடன்..

உன்னை முதன்முதலில் பார்த்தபோது
பரிதபமாக
என் உள்ள தட்டில்
உன் ஏஞ்சல் இதயத்தை
பிச்சையிட்டு சென்றாய்!

வந்த வரை லாபம்
என்ற எண்ணத்தில் இருந்தேன்..
உன் இதயம் வந்த நேரம்
உன் பைத்தியம்
என்னையும் பிடித்துவிட்டது
நின்ற இடத்திலேயே நின்றேன்
பைத்தியமாக....
உன் கிறுக்கு பிடித்த இதயமாக!

வேண்டுதலோ என்று
அய்யர் தவறாக
நின்னைத்து விட்டார் போலும்
அம்மன் குங்குமம்
நெத்தியிலே பூசி விட்டார்..

hmmm hmmm தெளியவே இல்லை
அவர் கோயில்லை
பூட்டி கொண்டுயிருந்தார்..
நான் வெளியில் வந்தேன்
கடைசியாக
உன் பைத்தியமாக!

காதல் நிலவரம் தற்போது..




தூரத்திலிருந்தே
பல வருடமாக பேசிக்கொள்கிரோம்
நாம் இருவரும் அடிக்கடி உள்ளங்களை
மாறி மாறி களவாடியும் வருகிறோம்
கண்களின் வாயிலாக....

உன் கண்கள் என்னை
நிராகரிக்கவில்லை என்றாலும்
பயமாகத்தான் இருக்கிறது
ஆறு காதல் கல்யாணங்கள்
செய்துவைத்த இந்த
தமிழ் மறவனுக்கு!

எனக்கு தைரியம் வரும்போது எல்லாம்
உனக்கு காலேஜ் பஸ் சீக்கிரம்
வந்து விடுகிறது
என்ன செய்ய....
இன்று பொய் நாளை வருகிறேன்
என்று தினமும்!

உண்மை நிலவரம்..




காதலை சொல்ல
பூக்கள் தேவை இல்லை
என் கண்களே போதும்
பட்ஜெட் பற்ற குறை தான்....

Light டா ஐஸ் வச்சு இருக்கேன் உனக்கு....




காதலியை பார்த்தவுடன்
கவிஞர்களுக்கு தான்
கவிதை எழுத வருகிறது...

உன்னை பார்க்கும் பொது
எனக்கு அப்படி ஒன்றுமே
வருவதில்லை மாறாக

நிறைய காசு தான் வருகிறது
ஓ! நீ மகாலக்ஷ்மி என்பதாலோ!

ஜில்லென்று ஒரு நக்கல்....

எனக்கு மழை நாட்களில்
நனைவது என்றால்
கொள்ளை ப்ரியம்!
“மழையில் எருமை மாடு மாதிரி
நனைந்து வருகிறாயே” என்று அடிக்கடி
அம்மா திட்டுவாங்க அப்போது..
சந்தோஷத்தில் சிரித்துக் கொள்வேன்!

இப்போதும்...

அப்படி தான் சிரித்துக் கொள்கிறேன்
சாதரண நாட்களில் கூட
மாலை நேரத்தில்
காலேஜ் பஸ்சில் இறங்கி
நீயும் அது போல
அசைந்து வருவதை கண்டு!

என் மாண்புமிகு காதலி ..

அமைதியாகவே எனை
மெல்ல மெல்ல
அடிமை செய்துவிட்டாய்
நானும் உன் ஆக்கிரமிக்கும்
கண்களுக்கு
சமாதி நிலை அடைந்து நிற்கிறேன்..

எதற்காக...

தேவதையின்
(Kate winslet போன்ற)
Lipstick போடாத
சிவப்பு இதழ்கள்
என் காதை குறும்பாக கடிக்கும் போதும்
என் இதழ்களின் ஆக்கிரமிப்பை
அடாவடியாக மறுக்கும் போதும்
உன் சேட்டை செய்யும்
முத்தத்திற்க்காகவே
எத்தனை வருஷமெல்லாம்
காத்தியிருக்றேன் என்று
அடிக்கடி சொல்லிக்கொண்டே தான் இருக்கிறேன்
ஜட்டி போட்ட
என் அக்காவின் குட்டி மகளுக்கு!!





Related Posts with Thumbnails