ஈழத்தின் ரத்தத்தில்
கரும்புள்ளி செம்புள்ளி
குத்திக்கொள்ளும்
சிங்கள பேரினவாதத்தின் சூழ்ச்சிகளையும்..
ஈழத்தின் வாழ்வுதனை
மீண்டும் அழிக்க
தொடங்கிய முதுகெலும்பு
இல்லாத இந்திய காங்கிரஸ்
காந்திகளின் சூழ்ச்சிகளையும்..
இந்த ஈழத்தின்
துயரப்பாடலை கேட்டு..
அநீதியை எதிர்த்து
நியாத்தை
உரக்க கேள்
எம் தமிழினமே!
நமது இந்தியா மக்களிடம்
மட்டுமல்லமல்
உலகத்தின் மக்களிடமும்
இந்த கொடூரமான சூழ்ச்சியில்
ஈழத்தில் மடிந்துக்கொண்டு இருக்கும்
உன் தொப்புள்கொடி
உறவுக்காக..
உரக்க கேள்!
..எம் தமிழினமே!
அதுவும் நியாத்தை
உடனே கேள்..எம் தமிழினமே!!
என் இந்திய திராவிடமே
என் உயிரான தமிழகமே!
உன்னை நம்பி கேட்கிறேன்...
இந்திய தமிழன்!
.. இளையராஜா
"உரக்க கேள்" சிறு அனிமேஷன் பதிவு