எங்கள் உலகில் பெண்களே இல்லாத
இந்த வாழ்கையும்
சுகமான...அமைதியான...இதயமான
ஒரு அழகு தான்..
ஏன்னென்றால் அந்த வெற்றிடத்தை
கனவுகளாக..கவிதையாக...காதலாக
எங்களுக்கு முழுமையாக தருகிறது
கலை!
ஒரு கல்யாணமாகதவனின் டைரி குறிப்பு..
Showing posts with label elunthathu_eluthinaen. Show all posts
Showing posts with label elunthathu_eluthinaen. Show all posts
Monday, January 17, 2011
Monday, October 18, 2010
தொடுவானம்...
Saturday, October 16, 2010
எம் மனசுக்குள்ள மைனா..:75th Post!
கல்யணம் நடக்குதோ இல்லையோ எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் நீண்டுக்கொண்டேதான் போகும் .. கல்யாணம் ஆகாதவர்களுக்கு!
எனக்கு பெரிதாக அந்த எதிர்ப்பார்புகள் அதிகமாக இருந்ததில்லை.. ஏனென்றால் 7½கள் என்னை அதிகமாக ஆட்க்கொண்டதால்
... ஆனால் 2007 வாக்கில் அது அதிகமாகியது..
ஒரு அழகான உணர்வு மேலோங்கியது...
காதல் வந்தால் பித்தம் தலைக்கேரும் என்பார்களே அது போல ..(orkutil என் நண்பர்களை பாடாய் படுத்தினேன் ...அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்கமாட்டேன்)
ஒரு பெண் மீது ..நீண்ட இடைவேளைக்கு பிறகு ...
காதல் மீது...காதல்
காதல் உயிர்த்தது ..
நான் அவளுக்கு வைத்த பெயர் ..மைனா..
காதல் வந்தால்..மொழி, இனம், நிறம் எது ?..
கலைக்கு போல என் காதலுக்கும் அந்த இலக்கணமில்லை!
ஆனால் அவள் அழகானவள்..எனக்கு அவளை பிடித்திருந்தது ..
பலநாள் பார்த்துக்கொண்டே தான் இருந்தேன் ..
மனதில் கற்பனை வளர்ந்து கொண்டே போனது ..நண்பன் கமலின் வற்புறுத்தலால், ஒரு நாள் அவளிடத்தில் சொன்னேன் ..
ஆனால் அந்த பெண்ணுக்கு காதல் எண்ணம் இல்லை முக்கியமா
என் மீது இல்லை என்று தெரிந்தது ..
மாற்றான் தோட்டது மல்லிகை வேண்டாம் என்கின்ற மரபை சிதைக்காமல் விலகினேன்..அந்த பெண்ணிடத்திலிருந்து ..
ஆனால் மைனா என்ற பெயரும், அந்த அழகான காதல் உணர்வும் மட்டும் என்னிடத்திலிருந்து விலகவேயில்லை...
ஏனோ தெரியவில்லை ..மைனா என்ற பெயர் மட்டும் இன்னும் இதயத்தில் ரெக்கை கட்டிப் பறந்துக்கொண்டு தான் இருக்கிறது..
இன்னும்...ஒரு மெலிதான பதட்டம் ... கூடவே புத்தம் புது காலை பாடலை..இசைஞானி RR-ராக மாற்றியது போல...ஒரு மெல்லிசையான பரபரப்பு!
சமிப காலம் வரை அந்த உணர்வுக்கு நான் உருவகம் கொடுக்கவில்லை ..
ஆனால் சின்ன எதிர்நோக்குதல் இளமையாய் துளிர்த்திருக்கிறது ...இந்தப்படத்தில் உள்ள பெண்ணைப் பார்த்த பிறகு..
அழகானவள் ???
கட்டிக்க போற பெண் அழகானவளா தான் இருக்க வேண்டுமா என்ன ??
எனக்கே சிரிப்பு தான் வரும் 

இந்த கேள்வி எழும்போதெல்லாம்...அனைத்து மனிதர்களிடத்தும் ஒரு தோற்றத்தில் (Face profileலில்) அழகு மறைந்து இருக்கும். அதனை வெளிக்குணர்ந்து வருபவன் தான் கைதேர்ந்த புகைப்பட கலைஞன் என்று என் புகைப்பட நண்பர் சம்பத் சொன்னது நினைவுக்கு வரும். உண்மை தான்! அந்த வகையான புற அழகை தான் நானும் இங்கு குறிப்பிடுக்கிறேன் .
பொதுவாக எல்லோருக்கும் ஆரிய (வெளிர் நிற ) மோகமிருக்கும் ...என்னமோ தெரியவில்லை, எனக்கு என்றும் திராவிட மோகம் தான் ..
என் திராவிடத்தில் கருப்பு இருந்தாலும் ..கலையான சிரிப்பு இருக்கும் ..சிரிப்புக்கு தான் வாழ்கையை அதிகரிக்கும் வல்லமை இருப்பதாக முன்னோர் கூற்று அடிக்கடி தலையில் கதவை தட்டுவதுண்டு. அதனால் மட்டுமில்லை!
புற அழகு தான் முக்கியமா என்று என்னிடம் கேட்டால் ...என்னை பொறுத்தவரை ஆமாம்! என்பேன்...கூடவே என் திராவிட பெண்கள் புற அழகில் மாநிறமோ , கறுப்போ... அகத்தில் கண்டிப்பாக புத்திசாலி தனம் கொண்ட வென்மனசு தான் இருக்கும் என்பதில் என்றுமே எனக்கு ஐய்யமில்லை ...அதனால் தான் அகத்தைவிட்டு புறத்தில் பயணிக்கிறது என் உணர்வு!
இப்படி மாநிறத்தில் .. அழகான புன்சிரிப்புடன் ...தென்னகத்து பெண்மையுடன் இருந்தால்.. எனக்கு போதும் ..
என் வாழ்க்கையையும் ..என் எதிர்பார்ப்புகளையும் ..ஒரு அழகான நட்புடன் பயணிக்கலாம் என்ற எனது கல்யாண ஆசைகள் மனக்கதவை தட்ட தான் செய்கிறது..
இப்படி கற்பனைகள் வளர்ந்துகொண்டே போகும்போதுயெல்லாம், இருபது வருடகாலம் என்னை உருவாகிய என் நண்பர்கள் கூறியவைகளை அனைத்தையும் என் கற்பனைகளோடு ஒப்பிட்டுப்பார்ப்பதுண்டு ..
முக்கியமா நண்பன் கமல் சொன்னது “எதிர்பார்ப்புகள் நிம்மதியை கெடுக்கும்டா மச்சான் ” 



அதற்கு என் நண்பன் தமிழ்குமார் “கடைசி வரை நமக்கு இந்த ஜஸ்ட் பாஸ் கதைப் போல தான் மச்சான்... நம்ம வாழ்க்கையும்??!!


”
அதற்கு என் மனதும் சிரித்துகொண்டே பதிலை, இப்படி தான் சொல்லிக்கொண்டேயிருக்கிறது ...
கற்பனை இல்லாத கலைஞனின் மனம் ஏதுடா...மச்சான்!..
என் கற்பனையும்..நட்பையும்...ஒரு சேர
காதலாய் ஒரு பெண்ணிடத்தில் சரணடையவேண்டும் என்று மீண்டும் நானும்!
என் முப்பதுவருட காலப் பயணத்தில்... ஒரு பக்கத்தில்... அந்த அழகான காதலுக்காக(கல்யாணத்துக்காக) காத்து இருக்கிறேன் !
இந்த நேரத்துல ஏன் இந்த பிட்டுன்னு கேட்பவர்களுக்கு..
நீண்ட நாட்களாய் எழுதவில்லை...


அதனால் தான் உணர்ந்ததை சொல்லுகிறேன்...
மீண்டும் எழுத்துகிறேன்!!


!!
Tuesday, January 06, 2009
..எழுதினேன்! ..(பதிவு எண் 6)
Monday, December 29, 2008
கடைசியாக..நான் கடவுள்!

என் மசாலா ரசனைகளுக்கு சிவாஜி, வாரணமாயிரம், பில்லா, போக்கிரிகள் வந்தாலும்..
உணர்வுகளை உரசும் உலக சினிமா தரவரிசையில் தமிழில் வெகு சில சினிமாக்கள் தான் வரும்..அது வெற்றிகரமாக ஓடுதோ இல்லையோ அது கண்டிப்பாக பலரை அதன் உணர்வு குவியல்களில் சிக்கவைத்து பிரமிப்பூட்டும், அதற்காகவே இது போன்ற படங்களுக்கு நான் காத்திருப்பதுண்டு.. அந்த வரிசையில்...மூன்று வருடமாக...அந்த படத்தின் தயாரிப்பாளர் மட்டுமில்லை இயக்குனர் பாலாவின் ரசிகரான நானும் தான்..
படம் : நான் கடவுள்!
என் காத்திருப்புக்கு மூன்றே மூன்று காரணங்கள் தான்..
உணர்வுகளை காட்சிகளாய் பதிவும் செய்யும் பாலாவின் இயக்கம்..
ஜெயமோகனின் ஏழாவது உலகமெனும் இலக்கிய நாவலின் ஒரு பகுதியை அவருடைய அனுமதியுடன் பாலாவே திரைகதையாய் எழுதி, அதற்கு வாசம் சேர்க்க வரும் வசனங்களை, இலக்கிய உலகின் இந்நாள் பெரிய நம்பிக்கையான ஜெயமோகனையே முதன் முதலில் திரைத்துறைக்கு அழைத்து வந்து எழுதவைத்தது!
உயிரையே மீண்டும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் இசையின் ஆதிமூலம்
இளையராஜாவின் இசை..
இங்கு மட்டுமில்லை இந்தியில் ஆமிர் கான், அபிஷேக் பட்சான் முதல் பலரும் பாலாவின் இயக்கத்தில் நடிக்க தவம் கிடக்கிறார்கள்.. அஜித்துக்கு பாலா செய்தது துரோகம் தான்.. கமல்ஹாசனின் வாரிசாக அஜித்தை இந்த படம் மாற்றி இருக்கும்.. யார் கண் பட்டதோ... ஆர்யாவுக்கு அடித்தது யோகம்.. இந்த படத்திலும், இனிமேல் நடிக்க போகும் படத்திலும் அர்யவிடமும் நடிப்பை எதிர்பார்க்கலாம்..
கதை..நாம் வாழும் இந்த சமுகத்தில் கடைசி மனிதர்களாக வாழும் .. பிட்சைக்காரர்களின் உரையவைக்கும் உலகத்தை பற்றியது தான் கதை. 'எழாவது உலகம்'..நாவல் முழுவதும் படமாக எடுக்க முடியாது...நாவலை படிக்க படிக்க கனத்து விடும் மனசு.. படித்தவர்களுக்கு நான் சொல்வது நன்கு புரியும்.அதனில் ஒரு பகுதியை கதையில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் வாயிலாக கதையை காசி(வாரனாசி)யில் ஆரம்பித்து தமிழகத்துக்கு பயணம் செய்கிறது பாலா எழுதிய நான் கடவுள். அதுவும் பாலாவின் பதிவுகளை சொல்லவே வேண்டாம் கண்டிப்பாக காட்சிக்கு காட்சி பதற வைக்கும்...
இசைஞானி படத்தை பார்த்து அழுதே விட்டாராம்.. பின்னணி இசையில் தற்போது உயிரூட்டி கொண்டு இருக்காராம்..
தேசியவிருதுகளின் இலக்கில் ...
பொங்கலுக்கு..
என் அண்ணாச்சி பாலாவின் நான் கடவுள்!
Saturday, December 20, 2008
..எழுதினேன்! ..(பதிவு எண் 4)

எங்கள் நட்புகுகளை..
எங்கள் மொழிகளை..
எங்கள் மதங்களை..
எங்கள் வாழ்கையை..
இணைக்கும்
எங்கள் இந்தியா..
என்று சாதிக்க வேண்டும் மென்றால்..?
இதற்கு ஒரே treatment
கட்டிப்புடி வைத்தியம் தான்!
நன்றி AR ரஹ்மான்.. 'Jiya Se Jiya' பாடல்.... Connections ஆல்பத்திலிருந்து...
(AR ரஹ்மானின் Connections என்கிற இந்த இசை ஆல்பத்தை நோக்கியா மொபைல் நிறுவனமும் பாரத்பாலா நிறுவனமும் இணைந்து தாயரித்துள்ளது.
'Jiya Se Jiya' என்பது தான் Connections ஆல்பத்தின் ஒன்பது பாடல்களில் முக்கியமான தாளம் தட்டும், இதயத்தை உணர்வோடு சேர்த்து கட்டும் , நட்பின் ஆழத்தை உணர்த்தும் பாடல். இந்த வீடியோவை ஆஸ்திரேலியாவின் Juan Mann's Free Hugs( இலவசமாக கட்புடிச்சுக்கலாம்) பிரச்சார அமைப்பின் தத்துவங்களின் அடிப்படையில், இந்தியா முழுவதும் நிறைய பேரை கட்டிபுடிக்க வைத்து படமாகியுள்ளார் இதனை இயக்கிய கனிகா மயர். இது தற்போது இந்தியா மட்டும்மள்ளாது youtube லும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது!)
Thursday, December 18, 2008
..எழுதினேன்! ..(பதிவு எண் 3)
Wednesday, December 17, 2008
..எழுதினேன்! ..(பதிவு எண் 2 )
Subscribe to:
Posts (Atom)



