Saturday, October 16, 2010

எம் மனசுக்குள்ள மைனா..:75th Post!

கல்யணம் நடக்குதோ இல்லையோ எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் நீண்டுக்கொண்டேதான் போகும் .. கல்யாணம் ஆகாதவர்களுக்கு!

எனக்கு பெரிதாக அந்த எதிர்ப்பார்புகள் அதிகமாக இருந்ததில்லை.. ஏனென்றால் 7½கள் என்னை அதிகமாக ஆட்க்கொண்டதால்... ஆனால் 2007 வாக்கில் அது அதிகமாகியது..

ஒரு அழகான உணர்வு மேலோங்கியது...

காதல் வந்தால் பித்தம் தலைக்கேரும் என்பார்களே அது போல ..(orkutil என் நண்பர்களை பாடாய் படுத்தினேன் ...அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்கமாட்டேன்)

ஒரு பெண் மீது ..நீண்ட இடைவேளைக்கு பிறகு ...

காதல் மீது...காதல்

காதல் உயிர்த்தது ..

நான் அவளுக்கு வைத்த பெயர் ..மைனா..

காதல் வந்தால்..மொழி, இனம், நிறம் எது ?..
கலைக்கு போல என் காதலுக்கும் அந்த இலக்கணமில்லை!

ஆனால் அவள் அழகானவள்..எனக்கு அவளை பிடித்திருந்தது ..
பலநாள் பார்த்துக்கொண்டே தான் இருந்தேன் ..

மனதில் கற்பனை வளர்ந்து கொண்டே போனது ..நண்பன் கமலின் வற்புறுத்தலால், ஒரு நாள் அவளிடத்தில் சொன்னேன் ..

ஆனால் அந்த பெண்ணுக்கு காதல் எண்ணம் இல்லை முக்கியமா
என் மீது இல்லை என்று தெரிந்தது ..

மாற்றான் தோட்டது மல்லிகை வேண்டாம் என்கின்ற மரபை சிதைக்காமல் விலகினேன்..அந்த பெண்ணிடத்திலிருந்து ..


ஆனால் மைனா என்ற பெயரும், அந்த அழகான காதல் உணர்வும் மட்டும் என்னிடத்திலிருந்து விலகவேயில்லை...

ஏனோ தெரியவில்லை ..மைனா என்ற பெயர் மட்டும் இன்னும் இதயத்தில் ரெக்கை கட்டிப் பறந்துக்கொண்டு தான் இருக்கிறது..

இன்னும்...ஒரு மெலிதான பதட்டம் ... கூடவே புத்தம் புது காலை பாடலை..இசைஞானி RR-ராக மாற்றியது போல...ஒரு மெல்லிசையான பரபரப்பு!


சமிப காலம் வரை அந்த உணர்வுக்கு நான் உருவகம் கொடுக்கவில்லை ..

ஆனால் சின்ன எதிர்நோக்குதல் இளமையாய் துளிர்த்திருக்கிறது ...இந்தப்படத்தில் உள்ள பெண்ணைப் பார்த்த பிறகு..



அழகானவள் ???

கட்டிக்க போற பெண் அழகானவளா தான் இருக்க வேண்டுமா என்ன ??

எனக்கே சிரிப்பு தான் வரும் இந்த கேள்வி எழும்போதெல்லாம்...அனைத்து மனிதர்களிடத்தும் ஒரு தோற்றத்தில் (Face profileலில்) அழகு மறைந்து இருக்கும். அதனை வெளிக்குணர்ந்து வருபவன் தான் கைதேர்ந்த புகைப்பட கலைஞன் என்று என் புகைப்பட நண்பர் சம்பத் சொன்னது நினைவுக்கு வரும். உண்மை தான்! அந்த வகையான புற அழகை தான் நானும் இங்கு குறிப்பிடுக்கிறேன் .


பொதுவாக எல்லோருக்கும் ஆரிய (வெளிர் நிற ) மோகமிருக்கும் ...என்னமோ தெரியவில்லை, எனக்கு என்றும் திராவிட மோகம் தான் ..

என் திராவிடத்தில் கருப்பு இருந்தாலும் ..கலையான சிரிப்பு இருக்கும் ..சிரிப்புக்கு தான் வாழ்கையை அதிகரிக்கும் வல்லமை இருப்பதாக முன்னோர் கூற்று அடிக்கடி தலையில் கதவை தட்டுவதுண்டு. அதனால் மட்டுமில்லை!

புற அழகு தான் முக்கியமா என்று என்னிடம் கேட்டால் ...என்னை பொறுத்தவரை ஆமாம்! என்பேன்...கூடவே என் திராவிட பெண்கள் புற அழகில் மாநிறமோ , கறுப்போ... அகத்தில் கண்டிப்பாக புத்திசாலி தனம் கொண்ட வென்மனசு தான் இருக்கும் என்பதில் என்றுமே எனக்கு ஐய்யமில்லை ...அதனால் தான் அகத்தைவிட்டு புறத்தில் பயணிக்கிறது என் உணர்வு!


இப்படி மாநிறத்தில் .. அழகான புன்சிரிப்புடன் ...தென்னகத்து பெண்மையுடன் இருந்தால்.. எனக்கு போதும் ..

என் வாழ்க்கையையும் ..என் எதிர்பார்ப்புகளையும் ..ஒரு அழகான நட்புடன் பயணிக்கலாம் என்ற எனது கல்யாண ஆசைகள் மனக்கதவை தட்ட தான் செய்கிறது..

இப்படி கற்பனைகள் வளர்ந்துகொண்டே போகும்போதுயெல்லாம், இருபது வருடகாலம் என்னை உருவாகிய என் நண்பர்கள் கூறியவைகளை அனைத்தையும் என் கற்பனைகளோடு ஒப்பிட்டுப்பார்ப்பதுண்டு ..

முக்கியமா நண்பன் கமல் சொன்னது “எதிர்பார்ப்புகள் நிம்மதியை கெடுக்கும்டா மச்சான் ”

அதற்கு என் நண்பன் தமிழ்குமார் “கடைசி வரை நமக்கு இந்த ஜஸ்ட் பாஸ் கதைப் போல தான் மச்சான்... நம்ம வாழ்க்கையும்??!!

அதற்கு என் மனதும் சிரித்துகொண்டே பதிலை, இப்படி தான் சொல்லிக்கொண்டேயிருக்கிறது ...

கற்பனை இல்லாத கலைஞனின் மனம் ஏதுடா...மச்சான்!..

என் கற்பனையும்..நட்பையும்...ஒரு சேர
காதலாய் ஒரு பெண்ணிடத்தில் சரணடையவேண்டும் என்று மீண்டும் நானும்!

என் முப்பதுவருட காலப் பயணத்தில்... ஒரு பக்கத்தில்... அந்த அழகான காதலுக்காக(கல்யாணத்துக்காக) காத்து இருக்கிறேன் !

இந்த நேரத்துல ஏன் இந்த பிட்டுன்னு கேட்பவர்களுக்கு..

நீண்ட நாட்களாய் எழுதவில்லை...

அதனால் தான் உணர்ந்ததை சொல்லுகிறேன்...
மீண்டும் எழுத்துகிறேன்!!!!


1 comment:

  1. //என் திராவிடத்தில் கருப்பு இருந்தாலும் ..கலையான சிரிப்பு இருக்கும் ..சிரிப்புக்கு தான் வாழ்கையை அதிகரிக்கும் வல்லமை//

    //என் கற்பனையும்..நட்பையும்...ஒரு சேர
    காதலாய் ஒரு பெண்ணிடத்தில் சரணடையவேண்டும்//

    என்ன ஒரு ரசனை நண்பா...கூடிய சீக்கிரத்தில்...வெகு விரைவில் நீங்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு உங்கள் திருமணம் நடக்கும்...படிக்க படிக்க காதல் உணர்வு அதிகமாகிறது ;)

    ReplyDelete

Related Posts with Thumbnails