
இந்த படம் தான்!, என்னை மீண்டும் புகைபடங்கள் எடுக்க தூண்டியது. சிறுவயதில் தெரியாத்தனமாய் பள்ளியில் ஆந்திர மாநிலத்தின் சிறுவர்களுக்கான சிறந்த பரிசு பெற்ற ஒரே நம்பிக்கைதான், மற்றபடி அதன் தொழில் நுட்பம் எதுவுமே எனக்கு தெரியாது என்பதே என் மனதின் உண்மை. இருந்தாலும் இதன் மேல ஆசை வளர்ந்தது!
புதுமையாக இத்துறையில் எதாவது செய்யலாம் என்கின்ற அதிகபிரசங்கித்தனம் எல்லாம் இல்லாமல், முதலில் எல்லோரும் பார்த்து பழகிய படங்களை எடுத்து பார்போம் என்றே ஆரம்பித்தேன், என் ஒளியின் பயணத்தை. அதற்கு சாட்சிள், இன்னும் என் பழைய பயணக்குறிப்புகள் அழிக்க படாமல், அப்படியே என் flickr தளத்தில் இருக்கிறது. ஒவ்வொரு படமும் இன்னொரு தளத்திற்கு என்னை கொண்டு சென்றது, நான் ஒழுங்காக அப்போதாவது ஒளிப்பதிவை கற்று கொள்வேன் என்று, இல்லை என்று சொல்லும் அப்பாவி மக்கு மாணவனாக தான், இன்றும் நான்.
என்னை எப்படியாவது, இந்த துறையில் பெயாரெடுக்க வைக்க வேண்டும் என்று என் நண்பர்கள் மற்றும் என் விமர்சகர்கள் இன்னும் அரும்பாடுப்படுகிறார்கள்.. பார்போம் என்று எதிர்காலத்தை நோக்கி நானும், என் காமெராவும்...