Showing posts with label The Enterance. Show all posts
Showing posts with label The Enterance. Show all posts

Tuesday, February 03, 2009

urakka kel thamizhinamae.. உரக்க கேள் எம் தமிழினமே!




ஈழத்தின் ரத்தத்தில்
கரும்புள்ளி செம்புள்ளி
குத்திக்கொள்ளும்
சிங்கள பேரினவாதத்தின்  சூழ்ச்சிகளையும்..

ஈழத்தின் வாழ்வுதனை
மீண்டும் அழிக்க
தொடங்கிய முதுகெலும்பு
இல்லாத இந்திய காங்கிரஸ்
காந்திகளின்  சூழ்ச்சிகளையும்..

இந்த ஈழத்தின்
துயரப்பாடலை கேட்டு..

அநீதியை எதிர்த்து
நியாத்தை
உரக்க கேள்
எம் தமிழினமே!

நமது இந்தியா மக்களிடம்
மட்டுமல்லமல்
உலகத்தின் மக்களிடமும்

இந்த கொடூரமான சூழ்ச்சியில்
ஈழத்தில் மடிந்துக்கொண்டு இருக்கும்
உன் தொப்புள்கொடி
உறவுக்காக..

உரக்க கேள்!
..எம் தமிழினமே!
அதுவும்  நியாத்தை
உடனே  கேள்..எம் தமிழினமே!!

என் இந்திய திராவிடமே
என் உயிரான தமிழகமே!
உன்னை நம்பி கேட்கிறேன்...

இந்திய தமிழன்!
.. இளையராஜா  

"உரக்க கேள்" சிறு அனிமேஷன் பதிவு

Saturday, December 13, 2008

..உணர்ந்ததைச் சொல்கிறேன்!!



என் வாழ்க்கையில்
நான் கடமைப்பட்டு இருக்கிறேன்
என்றால் அது
என் நண்பர்களுக்கு* தான்

தறுதலையாய் திரிந்த என்னை சரியான தடம்
நோக்கி பயணிக்க வைத்தவர்கள் அவர்கள்!

வெற்றி, தோல்வி, சந்தோசம், துக்கம் இவை
அனைத்தையும் தாண்டி என்னை தங்கள்
உள்ளத்தில் அணைத்து சுமந்து கொண்டு இருப்பவர்கள்..

நான் என் வாழ்க்கையை வாழ்வதும்
அவர்களுக்கு தான்..

என் நன்றியை அவர்களுக்கு
என் வாழ்க்கையில் சொல்கிறேன்..
இது தான் என் உண்மை..
நான் உணர்ந்ததைச் சொல்கிறேன்

என்றும் அன்புடன்..
இளையராஜா வேலுச்சாமி

நண்பர்கள்* ( இதில் என் அக்காக்கள், அண்ணன்கள், தம்பிகள் மற்றும் தங்கைகளும் அடங்குவர்)

Related Posts with Thumbnails