Showing posts with label OC Pakkangal. Show all posts
Showing posts with label OC Pakkangal. Show all posts

Monday, October 18, 2010

Pakkathil kadan Vaangiyathu



கண்ணதாசனா?..
கண்ணன் தான் உனக்கு தாசன்!
என்று பல தடவை
பெருமிதம் கொண்டு இருப்பாய்!
வரலாறும் தவறில்லை
என்று உன்னை அரவணைத்து இருக்கும்!

நீ என்ன கண்ணதாசனா??
அவன் அல்லவா உனக்கு தாசன்!!

பிருந்தாவனது கண்ணனே
மயங்கி கிடந்தானே காலங்காலமாக,
அவன் கோபியர்களை
நீ உன் வார்த்தையால்

உன் வர்ணனையால்
மயக்கி கடத்தியபோது(களவாடியபோது)..
நாங்கள் எமாத்திரம்?!

உலக காதலர்களின்
பெருந்தலைவர்களில்
நீயும் ஒருவன்

உனக்கு இன்று
பிறந்தநாள்…

வாழ்த்தவில்லை..

மாறாக காதலிக்கிறோம்
உன் வார்த்தைகளை.. காலங்காலமாக!

கவியரசு
கண்ணதாசன் பிறந்தநாளுக்கு எழுதியது
-ரசனைக்காரனிடம் கடன்வாங்கியது

Friday, February 06, 2009

பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை படியிங்கள்!


ஒரு படம் எடுத்து மக்கள் மனதில் இடம் பிடிப்பது என்பது சமீபத்தில் பெரிய விஷயம்..
கோடீஸ்வரன் முதல் தெருகோடியில் வாழ்பவனையும் ஒரே உணர்வில் இணைத்து விடும் வல்லமை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. அவ்வாறான சினிமாவை எடுக்கக்கூடிய வித்தை தெரிந்த இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படத்தின் நேரடி தியேட்டர் ரிப்போர்ட்...

முடிஞ்சா இது மாதிரி படம் எடுங்க... இல்லேன்னா கோயில் வாசல்ல போய் பிச்சை எடுக்க சொல்லுங்க அந்த so called popular tamil directors -ச!
...கல்லூரி மாணவன்.

ஜீரணிக்க முடியலைங்க.. படம் மிரட்டியிருக்காரு பாலா..
...ஆட்டோ ஓட்டுனர்.

Its completely a cult movie of recent times(even in recent decades of indian cinema)..
...திரைமொழி படிக்கும் மாணவன்.

மனநலம் குன்றியவர்களை படத்தில் உன்னத கலைஞர்களாக வாழவைத்திருகிறார் பாலா!
...நாடக நடிகர்.

இந்த ஆளால மட்டும் தான் இப்படி படம் எடுக்க முடியும்.. போட்ட லீவ்வுக்கும் கொடுத்த காசுக்கும் அர்த்தம் தரக்கூடிய படம்.. அவ்ளோ தான் சொல்ல முடியும் இப்போ.. மனச கசக்கிட்டாங்க பாலா..
...சாப்ட்வேர் எஞ்சினியர்.

இந்த படம் ஓடலைன்னா இனிமே தமிழ் சினிமாவுல படம் எடுக்கிறதே வேஸ்ட்!...சென்சார் போர்டு அதிகாரி பாபு ராமசுவாமி ( இந்த தகவல் மட்டும் ஏற்கனவே படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் பாபு ராமசுவாமி சொன்ன செய்தியை யூகி சேது பகிர்ந்து கொண்டது..)
தற்போதைக்கு இத்துடன் முடித்து கொள்கிறோம்..
விரைவில் விமர்சனத்துடன்..
கடன் வாங்கிய பக்கம் ரசனைக்காரன்

Wednesday, January 28, 2009

பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை படியிங்கள்!



கோல்டன் குலோப்பின் அயல் சினிமாவின் விருதையும் பெற்று ஆஸ்காரின் வாசலில் நின்று உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டுயிருக்கும் இன்னொரு படம் "வால்ஸ் வித் பஷிர் (waltz with bashir)" எனும் இஸ்ரேலிய மொழி திரைப்படம்.இதன் சிறப்பு உலகிலேயே முதல் முறையாக வந்து இருக்கும் அனிமேஷன் ஆவணப் படம் என்பது.

இஸ்ரேலிய போர் வீரரான அரி போல்மேன் இயக்கியிருக்கும் வால்ஸ் வித் பஷிரில், இஸ்ரேலின் ஆதரவுடன், மேற்கு லெபனோனில் 1980 களில் நடந்தேறிய சப்ரா சாட்திலா கொலைவெறி தாக்குதலுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று தனது மறந்து போன அந்த கொடூர அனுபவத்தை நினைவு கொள்ள, போரில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்களை தேடி செல்கிறார் அரி போல்மேன்..என ஆரம்பிக்கிறது இந்த திரைப்படம்.

BBCயின் தகவலின் படி செப்டம்பர் 16முதல்18, 1982 வரை மேற்கு லெபனோனில் இஸ்ரேலிய படையின் கண்காணிப்பில் அடைக்கலம் கொடுக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் சுமார் 800 பேர்கள் சப்ரா மற்றும் சாட்திலா இடங்களில் கிறிஸ்துவ பாலங்கிஸ்ட் குழுவால் கொடூரமாக கொல்ல ப்பட்டனர்.

சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு முன் லெபனோன் நாட்டு தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த இஸ்ரேலிய ஆதரவு கிறிஸ்துவ பாலங்கிஸ்டின் தலைவர் பஷிர் ஜெம்மையில் பாலஸ்தீனர்களால் கொள்ளப்பட்டார். அதற்கு பழிவாங்கவே இந்த கொலைவெறி தாக்குதலுக்கு இஸ்ரேல் முழுமையாக ஆதரவு அளித்து என்றும் தெரிவிக்கிறது.

மறந்து போன இந்த சம்பவம் தன் கனவில் வந்து போவதை உணர்ந்த அரி போல்மேன், அதனின் உண்மையை அறிய லெபனோனின் மேற்கு மீரூட்டுக்கு செல்கிறார். அங்கு போரில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்களையும், மனதத்துவ நிபுணர் ஒருவரையும் மேலும் ரான் பென் யிஸ்காய் எனும் பத்திரிகையாளர் ஒருவரையும் சந்தித்து உரையாடி உண்மையை கண்டறிவது தான் மீதி கதை.

கலை இயக்குனர் டேவிட் போலன்ஸ்கீ, அனிமேஷன் இயக்குனர் யோனி குட்மேன் மற்றும் இசையமைத்த மாக்ஸ் ரிசெர் ஆகிய மூவரும் அரி போல்மேனுடன் இத்திரைபடத்திற்காக நான்கு வருடம் உழைதிருக்கின்றனர். முதலில் 90 நிமிடத்திற்கான படத்தை எடுத்துக்கொண்டு, பிறகு ரோடோஸ்கோபி முறையில் திரைக்கதைக்கேற்ப அதனை 2300 வரைபடங்களாக பிரித்து காமிக் கதபாத்திரங்களுக்கான நகர்வை Flash, 3D போன்ற தொழில்நுட்பங்களின் துணையுடன் திரை சுருளிலேயே வரைந்துள்ளனர்.

அனிமேஷன் படம் தானே என்று பார்வையாளர்களும் அலட்சியமாக கருதாமல் காட்சிகளில் ஒன்றி வரலாற்றின் உண்மைகளுடன் ஆராய தூண்டுவது படத்தின் பெரிய வெற்றி. மேலும் உண்மை சூழலில் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் கதைகேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவது, வந்த ஏனைய காமிக்ஸ் திரைப்படங்களை காட்டிலும் புதுமையாகவும் உணர்வுபூர்வமாகவும் உள்ளதை உணர முடிகிறது என தர டிக்கெட் தெரிவிக்கிறார்.


நான் கடன் வாங்கிய பக்கம்..rasanaikaaran.wordpress.com

Monday, January 19, 2009

பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை படியிங்கள்!



கலைஞனுக்கு ஜாதி, மொழி, நாடு என்று எந்த அடையாளமும் கிடையாது.. வாழ்க்கை பயணத்தில் தான் பார்த்த அழகான அல்லது அழுக்கான விஷயங்களை, தன் கலை வல்லமையின் வாயிலாக கட்டாயம் பதிவு செய்து காலத்திடம் ஒப்படைத்து விடுவான், அவன் ஒரு கட்டத்தில் நின்றுவிட்டாலும்.. அவன் கலை தொடர்ந்து பயணித்து கொண்டே இருக்கும் காலத்தின் பதிவுகளில்.

அப்படி மலர்ந்து வரும் வல்லரசு இந்தியாவின் இன்னும் வளராத ஒரு தாழ்வான பக்கத்தினை இந்தியரான விகாஸ் ஸ்வருப், தன் எழுத்துகளால் பதிவு செய்த Q&A எனும் நாவலை பிரிட்டனின் பிரபல இயங்குனர் டேனி பாயல் அழகாவே Slumdog Millionare ராக படம் பித்து, உலகின் கவனத்தை ஈர்த்து விட்டார் என்று சொல்லியே ஆகா வேண்டும். Fox Searchlight Pictures தாயரித்த இந்த ஆங்கில படம் தற்போது உலக சினிமா அவார்டுகளை அள்ளிக்கொண்டு இருக்கிறது!


இந்தியா எப்போதுமே இப்படி வறுமையான வாழ்வியலையும் கொண்டது தான் என்று இந்த படம் நேரடியாக உலகுக்கு உரக்க சொன்னாலும், இந்த படத்தின் மூலம் இந்தியாவின் கலை திறமையும், கலாசார ரசனையும் மீண்டும் மேற்கத்தியவர்கள் பரவலாக ரசிக்க தொடங்கிவிட்டனர் என்றும் சொல்ல வேண்டும். அவர்களுக்கு எப்போதுமே பார்வை கோளாறு.. அவர்களின் பார்வைகள் அப்படி தான்..

அதை விட்டு விட்டு, அவர்கள் போட்டு கொடுத்த கலை தடத்தை பயன்படுத்தி நம்மவர்கள் முயற்சி செய்தால், இன்று கமர்ஷியல் சினிமாக்களில் மட்டும் கொடிகட்டி பறக்கும் நமது சினிமா, நாளை ஈரானிய சினிமாவுக்கு போட்டியாக இந்திய சினிமா உலக சினிமாவை அதிர வைக்கும் என்பது நிகழ கூடிய உண்மை.

கதை..
இந்தியாவில் நம் எல்லோருக்கும் பரிச்சயமான கோன் பநேகா க்ரோர்பதி ( Who wants to be a millionare? ) நிகழ்ச்சியில் பங்கேற்க்கும் ஜமால் என்கின்ற மும்பை சேரி வாழ் இளைஞன், எவ்வாறு போட்டியின் ஒவ்வொரு கடினமான கேள்விகளுக்கும், தன் வாழ்கையில் நடந்த நிகழ்வுகளை தொடர்புடுத்தி, அதனுள் எதிர்பாராமல் ஒளிந்திருந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்தி பதில் அளிக்கிறான் என்பது தான்.


இந்நிகழ்ச்சியில் எப்போதுமே பங்கேற்கும் போட்டியாளரும், பார்வையாளர்களும் படபடத்து போய் காண்பது போட்டியின் வாடிக்கையான விஷயம், ஆனால் படத்தில் தொகுப்பாளர் ஜமாலின் பதில்களை கண்டு அதிர்ச்சியில் தத்ருபமாக உறைந்து படபடக்கிறார்.

ஒரு கட்டத்தில் கால் சென்டரில் டி வாங்கி கொடுக்கும் வேலை பார்ப்பதாக சொல்லிக்கொள்ளும் ஜமால், எவ்வாறு எல்லா கேள்விக்கும் எளிதாக பதில் அளித்து கொண்டு இருக்கிறானே?.. எதோ ஏமாற்று வேலை நடக்கிறது! என்கிற சந்தேகத்தில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரேம் குமார் (அனில் கபூர் ), கடைசி கேள்விக்கு பதிலளிக்கும் முன் காவல் துறைக்கு விஷயத்தை தெரியப்படுத்துக்கிறார். இந்திய காவல்துறை வந்து.. எவ்வாறு விசாரிக்கும் என்று தான் அனைவருக்கும் தெரியுமே. காவல் துறை அதிகாரியாக வரும் இர்பான் கான் தன் கடமையை தவறாமல் செய்கிறார். அவர் ஜமாலுக்கு கொடுக்கும் third டிகிரி கொடுமைகள் நமக்கு ஷாக் அடித்து வலிக்கிறது.


விசாரணையில் அவன் விவரிக்கும் சம்பவங்களும்.. கொடுமையான அனுபவங்களும்.. அவையனைத்தும் நிகழ்ச்சியின் சாதரண கேள்வி பதில்களுக்குள் எதிர்பாராமல் சிக்கி இருப்பதையும், அந்நிலையிலும் உண்மையை எனும் ஒரே உடமையை தாங்கி அவன் வாழ்ந்திருப்பதையும் உணர்ந்த காவல்துறை அதிகாரி கான், ஜமாலை விடுதலை செய்கிறார்.

விசாரணை முடிந்து, குற்றவாளியில்லை என நிரூபணமாகி, மீண்டும் நிகழ்ச்சியின் கடைசி கேள்விக்கு பதில் அளிக்க வருகையில் … கடைகள் …வீடுகள்…பரபரக்கும் வீதியென ..மும்பை நகரமே மட்டுமல்லாது இந்தியாவே டிவி முன் சரண் அடைந்து நிற்கிறது… டிராபிக் சிக்னலில் ஜமால் காவல்துறை ஜீப்பில் அமர்ந்து இருப்பதை கண்டு அவனின் சமுதாய அடையாளங்களான சேரி மக்கள் “உன்னால் முடியும்,ஜமால்”, என ஆசிர்வதிக்கும் காட்சியை பார்க்கும் போது நம் கண்களும் நனைகிறது. சபாஷ்! டைரக்டர் சார்!

மூன்று பருவங்களை முன்னுருத்தி கதை நகர்வதால் அதற்கான வயதிலேயே சிறுவர்களையும் சிறுமிகளையும் மற்றும் நடிகர் நடிகையையும் தேர்ந்தெடுத்து நடிக்கவைத்திருக்கிறார்கள்.


ஜமால் ..இந்த கதாபாத்திரத்தை தாங்கி வாழ்ந்த சிறுவர்கள் அனுஷ், தனே ஹேமந்த் முதல் இளைஞர் தேவ் படேல்வரையிலான நடிகர்கள் என்று சொல்லுவதே தவறு!…அனைவரும் மனதில் இணைந்தே விட்டார்கள்.. அவர்கள் காட்டிய ஏக்கம், சோகம்,சிறுவயதிலிரிந்தே லத்திகாவின் மீது இழையோடிய காதல், அண்ணனின் தூரோகத்தை மன்னிக்காத வேகம், காவல் துறை அதிகாரியிடம் சிக்கி சித்தரவதை படும் வேதனை, கடைசியாக தொகுப்பாலரின் கேள்விகளை எதிர்கொளும் நம்பிக்கை என் அடுக்கிக்கொண்டே போகலாம்… அவர்கள் வெளிக்காட்டிய எண்ணற்ற உணர்வுகுகள் நம்மை ஜமாலுக்கு ஆதரவாக கதைக்குள் கட்டி போடுகிறது.


அதே போன்று லத்திகாவாய் வரும் பெண்கள் ருபினா அலி, தன்வி கணேஷ், பிரெய்தா பின்டோ மூவரும் தங்கள் சூழ்நிலைகளுக்கு கைதியாகி ஒவ்வோறு முறையும் சிதைந்து மீண்டு வெளிவரும் இடங்களில் நம்மை பரிதவிக்க வைத்திருகிறார்கள் .

அடுத்து அண்ணன் சலீம் மாக வரும் சிறுவர்களும், நடிகரும்(அஸாருதின் முகமத், அஷுடோஷ், மதுர் மித்தல்) சின்ன வயதிலேயே வில்லத்தனமும், அசட்டு சிரிப்புடன் செய்யும் கலவாணித்தனமும், பேராசையும், கிரோத மும் பிறகு பாசத்துடன் தம்பியுடன் லத்திகாவை சேர்க்கும் தருணங்களில்லும் அசத்தி விட்டனர். படத்தில் சிறு காட்சிகலாயினும் வந்து போன அனைத்து நடிகர்களும் அவ்வாறே!

இசை ஏ. ஆர். ரஹ்மான்.. மேற்கத்தியவர்கள் தான் டார்கேட் என்பதால் அவர்களுக்கு பிடிக்கும் வண்ணம், மனுஷன் மேற்கத்திய hiphopping இசையோடு சம்பிரதயதுக்காக இந்திய மற்றும் பாரசீக இசையையும் கலந்தடித்து கவரத்தான் செய்கிறார். படத்தின் காட்சியமைப்புகள் காண்டிட் ஸ்டைலில் ஆண்டனி டொட் மென்ட்லின் ஒளிப்பதிவு பயணிப்பதால் அவருக்கு அதிகம் வேலை கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. ரஹ்மானை விட இதில் மியா இசையமைத்த Paper Planes மற்றும் ஒ சாயா பாடலும் தான் மேற்கத்தியவர்களிடம் அதிகமாக கவரப்படுள்ளது. ரஹ்மானை பொறுத்தவரை மொசம்-எஸ்கேப் இசையில் மெதுவாக மெருகேறி அதிக தாள தட்டில் சிதார் இசை தப்பிப்பது போன்ற இசை சேர்ப்பு அருமை, கடைசியாக படத்தில் வரும் ஜெய் ஹோ! பாடல் யாரையும் ஆட்டம் போட வைத்துவிடும்.

SlumDog Millionare..

திரைக்கதையின் பயணமும்…அதனை பதிந்த விதமும் பார்வையாளர்களை பதப்பதைக்கும் மனதோடு சீட்டின் நுனியில் கனத்த மனதுடன் அமர வைத்து விடுக்கிறது..


படமே விசாரணையில் தொடங்குவதால், ஜமால் தான் பதிலளித்த பின்னணியை சொல்லும் போது.. அனைத்து பதில்களுக்கும், அவன் வாழ்கையில் நடந்த ஒரு நிகழ்வை நோக்கி, non linear narative என்ற திரை மொழியின் கிளை காட்சிக்குள் புகுந்து, அவனின் ஒவ்வொரு அனுபவத்தையும் சொல்ல பயணிக்கிறது சிமோன் பியூபோவின் அருமையான திரைக்கதை. அதனை டாக்குமென்றி பாதிப்பில் உண்மையாக நடந்தேறி இருக்கும் என்ற நம்பும் தோணியில், சில உண்மையான மும்பை கலவரங்களையும் சேர்த்து காட்சிகளில், சேரி வாழ்வியலையும், அதன் பாதிப்புகளையும், நிகழ்கால கேள்வி பதில் நிகழ்ச்சியோடு இணைத்து காட்சியாக வரைந்திருக்கிறார் இயக்குனர் டேனி பாயல்.


மனிதனின் நினைவுகள்..எப்போதும் இழப்புகளை மிக ஆழமாக பதிவு செய்துவிடும் என்ற இயற்கையின் எதார்த்தத்தை தாண்டி, தன் வழக்கமான ஹாப்பி எண்டிங் பார்முலாவை மீண்டும் பயன்படுத்தி மிக ஆழமாக..எதார்த்தமாக.. அழகாக ஞாபகமாக்குகிறார் இயக்குனர் டேனி பாயல் என்று அட்டகாசமாய் வாழ்த்துகிறார் நம் தர டிக்கெட் SlumDog Millionare படம் முடிந்து வெளியே வரும்போது!

Saturday, January 03, 2009

பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை பாருங்கள்!

இசைஞானியின் இசைவரத்தில்..
நான் கடவுள்
திரைப்படத்தின் பிண்ணணி இசை சேர்ப்பு!




நன்றியுடன் நான் கடன் வாங்கிய பக்கம்..www.kollywoodtoday.com

Friday, January 02, 2009

பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை படியிங்கள்!

From rasanaikaran


மார்க் போடுவதெல்லாம் படித்த மேதாவி மடையர்களின் வேலை..

தாயின் தாலாட்டுக்கு மார்க் போட முடியுமா என மீண்டும் உயிரெடுக்கும் உணர்வான
இளையராஜா alias இசை!

படம் .. நான் கடவுள்!

நீண்ட இடைவேளிக்கு பிறகு மனதுருக கண்கள் ஈரம் பார்க்க வைக்கும் இசை!

சாதனா சர்கம்மும், மதுமிதாவும் உயிர் தந்த அம்மா..மாத மணிக்கோயில் முதலிய இரு பாடல்களும் ஒரே உணர்வில் உருவான இசை என்றாலும் மனதை மயக்கி வேறுபடுகின்றன!

அதே போல் ஸ்ரேயா க்கோசல் பாடிய கண்ணில் பார்வையும், இசைஞானி உயிரூட்டிய ஒரு காற்றில் பாடல்களும் ஒரே இசையின் வடிவம். இசைஞானி தன் பாடகர்களுக்கு திடீரென test வைப்பாராம். அவ்வாறு இந்த கடினமான பாடலுக்கு பரிட்சை எழுதி தேர்வானவர் ஸ்ரேயா க்கோசல் என கேட்கும் போது உணரலாம்!

அருமையான பாடல்! இதே பாடல்..இசைஞானி பாடும் போது தாலாட்டுகிறது.. பெற்ற தாயின் அன்பின் உயரத்துக்கு ஈடு ஏது என உணர்த்தும்!

பிட்சை பாத்திரம்.. தன் பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார் என அரைவேக்காடுகள் கூறுகின்றன! ராஜாவின் ரமணமாலையில் வந்த பழைய பாடலும், நான் கடவுளில் மறுபிறவி எடுத்து வந்த புதிய பாடலும் இசையின் இறவா வரம்!

கடைசியாக ஓம் சிவ ஓம்!
இதை கேட்ட வடநாட்டு சாமியாரின் கண்களில் நீர் வழிந்ததாக ஆனந்த விகடனில் வெளிவந்த நான் கடவுளின் பிரத்தேயகப் பேட்டியில் படித்தேன். இந்த பாடலை கேட்ட பிறகு என் கண்களிலும் நீர் தாரையெடுத்தது பல ஆண்டுகளுக்கு பிறகு!

எதோ வார்த்தைகளில் சொல்லயியலாத பாடல்! உயிரை உலுக்குகிற இசை என மனதை சஞ்சலப்படுத்துகிறது!

அதானே இசைஞானி நமக்காக வாங்கி வந்த வரம் என மீண்டும் உணர்த்தும் நான் கடவுளின் இசை!

இப்படிக்கு..

அன்புடன்
தர டிக்கெட்!

நான் கடன் வாங்கிய பக்கம்..rasanaikaaran.wordpress.com
Related Posts with Thumbnails