![]() |
From rasanaikaran |
மார்க் போடுவதெல்லாம் படித்த மேதாவி மடையர்களின் வேலை..
தாயின் தாலாட்டுக்கு மார்க் போட முடியுமா என மீண்டும் உயிரெடுக்கும் உணர்வான
இளையராஜா alias இசை!
படம் .. நான் கடவுள்!
நீண்ட இடைவேளிக்கு பிறகு மனதுருக கண்கள் ஈரம் பார்க்க வைக்கும் இசை!
சாதனா சர்கம்மும், மதுமிதாவும் உயிர் தந்த அம்மா..மாத மணிக்கோயில் முதலிய இரு பாடல்களும் ஒரே உணர்வில் உருவான இசை என்றாலும் மனதை மயக்கி வேறுபடுகின்றன!
அதே போல் ஸ்ரேயா க்கோசல் பாடிய கண்ணில் பார்வையும், இசைஞானி உயிரூட்டிய ஒரு காற்றில் பாடல்களும் ஒரே இசையின் வடிவம். இசைஞானி தன் பாடகர்களுக்கு திடீரென test வைப்பாராம். அவ்வாறு இந்த கடினமான பாடலுக்கு பரிட்சை எழுதி தேர்வானவர் ஸ்ரேயா க்கோசல் என கேட்கும் போது உணரலாம்!
அருமையான பாடல்! இதே பாடல்..இசைஞானி பாடும் போது தாலாட்டுகிறது.. பெற்ற தாயின் அன்பின் உயரத்துக்கு ஈடு ஏது என உணர்த்தும்!
பிட்சை பாத்திரம்.. தன் பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார் என அரைவேக்காடுகள் கூறுகின்றன! ராஜாவின் ரமணமாலையில் வந்த பழைய பாடலும், நான் கடவுளில் மறுபிறவி எடுத்து வந்த புதிய பாடலும் இசையின் இறவா வரம்!
கடைசியாக ஓம் சிவ ஓம்!
இதை கேட்ட வடநாட்டு சாமியாரின் கண்களில் நீர் வழிந்ததாக ஆனந்த விகடனில் வெளிவந்த நான் கடவுளின் பிரத்தேயகப் பேட்டியில் படித்தேன். இந்த பாடலை கேட்ட பிறகு என் கண்களிலும் நீர் தாரையெடுத்தது பல ஆண்டுகளுக்கு பிறகு!
எதோ வார்த்தைகளில் சொல்லயியலாத பாடல்! உயிரை உலுக்குகிற இசை என மனதை சஞ்சலப்படுத்துகிறது!
அதானே இசைஞானி நமக்காக வாங்கி வந்த வரம் என மீண்டும் உணர்த்தும் நான் கடவுளின் இசை!
இப்படிக்கு..
அன்புடன்
தர டிக்கெட்!
நான் கடன் வாங்கிய பக்கம்..rasanaikaaran.wordpress.com
No comments:
Post a Comment