Wednesday, November 17, 2010

சென்னைய பத்தி..ரசிக்கும் படியான ஒரு குறும்பு படம்

நம்ம தரடிக்கெட்டுக்கு ரசிக்கும் படியான ஒரு குறும்பு படம்..அதுவும் சிங்கரா சென்னைய பத்தி..

இது தான் சென்னை, எளிமையா... அழகா... சிரிக்க.. ரசிக்க வைச்சிருக்காங்க!




பக்கத்தில் கடன் வாங்கியது, தரடிக்கெட்>ரசனைக்காரன்...Nandri Nandhesh Thalaiva!!

Thursday, November 11, 2010

Anushka as (Telugu Chandramughi2) - Nagavalli

மறைந்த கன்னட நடிகர் விஷ்ணு வரதன் நடித்து கன்னடத்தில் பெரும் வெற்றியை ஈட்டிய நமது சந்திரமுகியின் இரண்டாவது தொடர்ச்சியை தெலுங்கில் நாகவள்ளி என்ற தலைப்பில் இயக்கி வருகிறார் இயக்குனர் பி.வாசு. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், நடிகைகள் அனுஷ்கா, கமாலினி முகர்ஜி, ஷாரதா தாஸ், ரிச்சா, பிரம்மானந்தம் முதலியோர் நடிக்கும் இந்த பத்திற்கு குரு கிரண் இசையமைத்து இருக்கிறார்.

படத்தில் நாகவள்ளியாக அதாவது சந்திரமுகியாக வருவது...நடிகை அனுஷ்கா





Tuesday, October 19, 2010

பார்த்தேன் ரசித்தேன்

மலேசியா..ஐரோப்பா நாடுகளில் தமிழர்கள் மத்தியில் தற்போது மேற்கத்திய ராப் இசையின் மீது
அளவு கொள்ளாத மோகம் ஏற்பட்டுள்ளது..நமது திரை இசையை
மேற்கத்திய
ராப் இசை
த்
தாளதட்டுக்கு மிக ரசனையாகவே
கலந்தடித்து கலக்கி வருகின்றனர் என்று பாராட்டினால் அது
மிகையாகாது.

Monday, October 18, 2010

Trailers 10 2010

ஆரண்ய காண்டம்



மைனா

Galatta Catewalk

சமிபத்தில் மும்பையில் நடந்த
கலாட்ட
வான கேட்வாக்கில் அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஹ்ரிதிக் ரோஷன்..

Photobucket


Photobucket


Photobucket

Photobucket


Photobucket


Photobucket

பார்த்தேன் ரசித்தேன்

மகேஷ் பாபு,
அனுஷ்கா
நடித்த கலீ
ஜா படத்தின் பாடல் இரண்டை
பார்த்தேன் ரசித்தேன்!







அஜித்குமாரின் மங்காத்தா: Stillz Puthusu



Pakkathil kadan Vaangiyathu



கண்ணதாசனா?..
கண்ணன் தான் உனக்கு தாசன்!
என்று பல தடவை
பெருமிதம் கொண்டு இருப்பாய்!
வரலாறும் தவறில்லை
என்று உன்னை அரவணைத்து இருக்கும்!

நீ என்ன கண்ணதாசனா??
அவன் அல்லவா உனக்கு தாசன்!!

பிருந்தாவனது கண்ணனே
மயங்கி கிடந்தானே காலங்காலமாக,
அவன் கோபியர்களை
நீ உன் வார்த்தையால்

உன் வர்ணனையால்
மயக்கி கடத்தியபோது(களவாடியபோது)..
நாங்கள் எமாத்திரம்?!

உலக காதலர்களின்
பெருந்தலைவர்களில்
நீயும் ஒருவன்

உனக்கு இன்று
பிறந்தநாள்…

வாழ்த்தவில்லை..

மாறாக காதலிக்கிறோம்
உன் வார்த்தைகளை.. காலங்காலமாக!

கவியரசு
கண்ணதாசன் பிறந்தநாளுக்கு எழுதியது
-ரசனைக்காரனிடம் கடன்வாங்கியது

தொடுவானம்...




தொடுவானம்..

அழகான சாரல்...

மழையில் கலைந்த மேகம்..

மண் சுவைத்த தாகம்...

என எண்ணற்ற மனவுறைகள்..

ஒரு சேர காதலிக்க

செல்லம் பிரகாஷ்ராஜின்

இதயம் தொடுவானம்...


செவ்வாய் கிரகத்திற்கு இந்திய விண்கலம்: அப்துல் கலாம்

டேராடூன் : 2030-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு இந்திய விண்கலம் செல்வதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

டேராடூனில் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டு மாணவர்களிடையே அப்துல் கலாம் பேசியதாவது:

2030-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்துடன் இது சாத்தியமாகக் கூடியதே.

ஊழலை ஒழிக்க அவரவர் வீட்டில் இருந்தே பிரசாரத்தை ஆரம்பிக்க வேண்டும். இது தான் சிறந்த வழி ஆகும்.

கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாடு இது. உங்கள் தந்தை துரதிர்ஷ்டவசமாக ஊழல் புரிபவராக இருந்து நீங்கள் அவரிடம் ஊழல் செய்வதை விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டால் அதுதான் வீட்டில் இருந்தே ஊழலை ஒழிப்பதற்கு மிகச் சிறந்த வழியாகும். இது போன்று அனைவரும் செய்ய ஆரம்பித்துவிட்டால் ஊழல் என்பது இல்லாமல் போகும்..." என்றார் கலாம்.

கடந்த 2001-ம் ஆண்டு நிலவுக்கு சந்திராயன்-I அனுப்புவது குறித்து கலாம் இதே போன்றதொரு மாணவர் கூட்டத்தில்தான் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகராக இருந்தார்.

நன்றி தட்ஸ்தமிழ்!

Saturday, October 16, 2010

எம் மனசுக்குள்ள மைனா..:75th Post!

கல்யணம் நடக்குதோ இல்லையோ எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் நீண்டுக்கொண்டேதான் போகும் .. கல்யாணம் ஆகாதவர்களுக்கு!

எனக்கு பெரிதாக அந்த எதிர்ப்பார்புகள் அதிகமாக இருந்ததில்லை.. ஏனென்றால் 7½கள் என்னை அதிகமாக ஆட்க்கொண்டதால்... ஆனால் 2007 வாக்கில் அது அதிகமாகியது..

ஒரு அழகான உணர்வு மேலோங்கியது...

காதல் வந்தால் பித்தம் தலைக்கேரும் என்பார்களே அது போல ..(orkutil என் நண்பர்களை பாடாய் படுத்தினேன் ...அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்கமாட்டேன்)

ஒரு பெண் மீது ..நீண்ட இடைவேளைக்கு பிறகு ...

காதல் மீது...காதல்

காதல் உயிர்த்தது ..

நான் அவளுக்கு வைத்த பெயர் ..மைனா..

காதல் வந்தால்..மொழி, இனம், நிறம் எது ?..
கலைக்கு போல என் காதலுக்கும் அந்த இலக்கணமில்லை!

ஆனால் அவள் அழகானவள்..எனக்கு அவளை பிடித்திருந்தது ..
பலநாள் பார்த்துக்கொண்டே தான் இருந்தேன் ..

மனதில் கற்பனை வளர்ந்து கொண்டே போனது ..நண்பன் கமலின் வற்புறுத்தலால், ஒரு நாள் அவளிடத்தில் சொன்னேன் ..

ஆனால் அந்த பெண்ணுக்கு காதல் எண்ணம் இல்லை முக்கியமா
என் மீது இல்லை என்று தெரிந்தது ..

மாற்றான் தோட்டது மல்லிகை வேண்டாம் என்கின்ற மரபை சிதைக்காமல் விலகினேன்..அந்த பெண்ணிடத்திலிருந்து ..


ஆனால் மைனா என்ற பெயரும், அந்த அழகான காதல் உணர்வும் மட்டும் என்னிடத்திலிருந்து விலகவேயில்லை...

ஏனோ தெரியவில்லை ..மைனா என்ற பெயர் மட்டும் இன்னும் இதயத்தில் ரெக்கை கட்டிப் பறந்துக்கொண்டு தான் இருக்கிறது..

இன்னும்...ஒரு மெலிதான பதட்டம் ... கூடவே புத்தம் புது காலை பாடலை..இசைஞானி RR-ராக மாற்றியது போல...ஒரு மெல்லிசையான பரபரப்பு!


சமிப காலம் வரை அந்த உணர்வுக்கு நான் உருவகம் கொடுக்கவில்லை ..

ஆனால் சின்ன எதிர்நோக்குதல் இளமையாய் துளிர்த்திருக்கிறது ...இந்தப்படத்தில் உள்ள பெண்ணைப் பார்த்த பிறகு..



அழகானவள் ???

கட்டிக்க போற பெண் அழகானவளா தான் இருக்க வேண்டுமா என்ன ??

எனக்கே சிரிப்பு தான் வரும் இந்த கேள்வி எழும்போதெல்லாம்...அனைத்து மனிதர்களிடத்தும் ஒரு தோற்றத்தில் (Face profileலில்) அழகு மறைந்து இருக்கும். அதனை வெளிக்குணர்ந்து வருபவன் தான் கைதேர்ந்த புகைப்பட கலைஞன் என்று என் புகைப்பட நண்பர் சம்பத் சொன்னது நினைவுக்கு வரும். உண்மை தான்! அந்த வகையான புற அழகை தான் நானும் இங்கு குறிப்பிடுக்கிறேன் .


பொதுவாக எல்லோருக்கும் ஆரிய (வெளிர் நிற ) மோகமிருக்கும் ...என்னமோ தெரியவில்லை, எனக்கு என்றும் திராவிட மோகம் தான் ..

என் திராவிடத்தில் கருப்பு இருந்தாலும் ..கலையான சிரிப்பு இருக்கும் ..சிரிப்புக்கு தான் வாழ்கையை அதிகரிக்கும் வல்லமை இருப்பதாக முன்னோர் கூற்று அடிக்கடி தலையில் கதவை தட்டுவதுண்டு. அதனால் மட்டுமில்லை!

புற அழகு தான் முக்கியமா என்று என்னிடம் கேட்டால் ...என்னை பொறுத்தவரை ஆமாம்! என்பேன்...கூடவே என் திராவிட பெண்கள் புற அழகில் மாநிறமோ , கறுப்போ... அகத்தில் கண்டிப்பாக புத்திசாலி தனம் கொண்ட வென்மனசு தான் இருக்கும் என்பதில் என்றுமே எனக்கு ஐய்யமில்லை ...அதனால் தான் அகத்தைவிட்டு புறத்தில் பயணிக்கிறது என் உணர்வு!


இப்படி மாநிறத்தில் .. அழகான புன்சிரிப்புடன் ...தென்னகத்து பெண்மையுடன் இருந்தால்.. எனக்கு போதும் ..

என் வாழ்க்கையையும் ..என் எதிர்பார்ப்புகளையும் ..ஒரு அழகான நட்புடன் பயணிக்கலாம் என்ற எனது கல்யாண ஆசைகள் மனக்கதவை தட்ட தான் செய்கிறது..

இப்படி கற்பனைகள் வளர்ந்துகொண்டே போகும்போதுயெல்லாம், இருபது வருடகாலம் என்னை உருவாகிய என் நண்பர்கள் கூறியவைகளை அனைத்தையும் என் கற்பனைகளோடு ஒப்பிட்டுப்பார்ப்பதுண்டு ..

முக்கியமா நண்பன் கமல் சொன்னது “எதிர்பார்ப்புகள் நிம்மதியை கெடுக்கும்டா மச்சான் ”

அதற்கு என் நண்பன் தமிழ்குமார் “கடைசி வரை நமக்கு இந்த ஜஸ்ட் பாஸ் கதைப் போல தான் மச்சான்... நம்ம வாழ்க்கையும்??!!

அதற்கு என் மனதும் சிரித்துகொண்டே பதிலை, இப்படி தான் சொல்லிக்கொண்டேயிருக்கிறது ...

கற்பனை இல்லாத கலைஞனின் மனம் ஏதுடா...மச்சான்!..

என் கற்பனையும்..நட்பையும்...ஒரு சேர
காதலாய் ஒரு பெண்ணிடத்தில் சரணடையவேண்டும் என்று மீண்டும் நானும்!

என் முப்பதுவருட காலப் பயணத்தில்... ஒரு பக்கத்தில்... அந்த அழகான காதலுக்காக(கல்யாணத்துக்காக) காத்து இருக்கிறேன் !

இந்த நேரத்துல ஏன் இந்த பிட்டுன்னு கேட்பவர்களுக்கு..

நீண்ட நாட்களாய் எழுதவில்லை...

அதனால் தான் உணர்ந்ததை சொல்லுகிறேன்...
மீண்டும் எழுத்துகிறேன்!!!!


Monday, July 26, 2010

Tamilkumar-en-nanban




தமிழ்குமார் என்று பேரு சொன்னாலே மனசுக்குள்ள தானா சிரிப்பு வரும்...உண்மையிலே அவ்ளோ நல்லவன்!


ஆயிரம் பேரு எதிர்த்து வந்தாலும்.... நின்னு நாட்டாமை பண்ணுவான்!..அருவாவ இருந்தா மெதுவா....மெதுவா.... மெலடி பாடுவான் becos பேச்சு பேச்சாதான் இருக்கணும்ன்னு விரும்புவான்! ஹ ஹ ஹ... [:D]!!

நாங்க பண்ற காலேஜ் பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ற பஞ்சாயத்து தலைவரும் இவரு தான்..பஞ்சாயத்து யாருகிட்டேன்னு கேட்கலையே எல்லா Department HODகிட்ட தான்!

மறக்க முடியம்மா Kalaimagal saba, Sivalingam Tea stall, Weekly test, Physics & Computer labs, Shanthi Kamala Vijaya and Rajarajan theatre, Deepavalli-Pongal First day releases, Mcfessas Tea stall, Scan Function and all our college buses and college days.

என்னை பாதி நேரம் Classukku வெளியே நிக்க வச்சு அழகு பார்த்தவன். Tamil-Naan-Meghanathan sir combinationன்ன சொல்லவே வேண்டாம் காமெடி கலவரம் தான். 100% sure! audience sa ஏமாத்தவே மாட்டோம்!


இவன் பேச ஆரம்பிச்சிட்ட கல கல கச்சேரி தான் எங்களுக்கு..collegela மட்டுமில்லை இப்பவும்! அரசியல், சினிமா, நாத்திகம், எது ஆன்மீகம், ஓஷோ என்று ஒவ்வொரு விஷயத்தையும் சுவாரசியமாய் சொல்லி அசத்தும், நான் ரசிக்கும் முதன்மை ரசனைகாரர்களில் ஒருவன், தமிழ் குமார் .. கேட்டுக்கிட்டே இருக்காலாம் இவன் பேச்ச!

உணர்வுபூர்வமாய் ஈழத்துக்காக தன் எழுத்துகள் மூலம் அன்பையும், ஆதரவையும் காட்டுபவன்!

எவ்ளோ பெரிய கஷ்டமானாலும்..மனசு சொல்ல துடிக்கும் நெருங்கிய நண்பன்!
நான் சண்டை போட்டாலும் அடுத்த அஞ்சாவது நிமிஷம் Teakadaiல ஐக்கியமாவோம்!
அதாங்க எங்க நட்பு !

ஒரு குணப்படுத்த முடியாத கெட்ட வியாதி இவனுக்கு இருக்கு...ஆமாம் "விஜய் ரசிகன்" என்பது தான் அது!

நான் இவன் மாதிரி பிறந்து வாழவில்லையேன்னு பொறாமைப்பட வைத்தவன்.. எம் தமிழன்! Really, I envy him!

என்றும் அன்புடன்,

மச்சான்

இளையராஜா வேலுச்சாமி,

Superstar ரஜினி வெறியன்,

தஞ்சை மாவட்டம்

Friday, July 09, 2010

Remembering the legendary, Guu Dutt | Marakka Mudiyumma

மறக்க முடியும்மா:


ப்யஸா, Kaagaz Ke Phool, Sahib Bibi Aur Ghulam, Chaudhvin Ka Chand போன்ற மாபெரும் இந்தி திரைகாவியங்களை இந்தியாவில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்! குரு தத், இந்தி திரை உலகின் போற்றுதலுக்குரிய கலாரசிகனாவார். இன்று ஜூலை 9ஆம் தேதி அவரது 85 வது பிறந்த நாளை நமது தளம் கொண்டாடுக்கிறது!




Thursday, July 08, 2010

Thilalangadi Trailer

தெலுங்கு வெற்றித் திரைப்படமான 'கிக்'கின் தமிழ் பதிப்பு. உபயம் ஜெயம் ராஜா. ஜெயம் ரவி, தமன்னா, ஷ்யாம்,வடிவேலு, சந்தானம் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வெளிவர இருக்கும் எடிட்டர் மோகன் - சன் பிச்சர்ஸ் வழங்கும் தில்லாங்காடி திரைப்படத்தின் முன்னோட்டம்!

Friday, May 21, 2010

Vedham_Telugu_moviePreview




அகிராவின் குரோசவாவின் பட ஸ்டைலில் ஒரு தெலுங்கு படம் வரவிருக்கிறது.. ஐந்து கதைகள் ஒரு பிரச்சனையை நோக்கி பயணிக்கிறதாம் 'வேதம்' திரைப்படம்... பிரபல இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பை, கேபிள் ராஜாவாக அல்லு அர்ஜுன்( அதிவேகமாக முன்னேறி வரும் இளம் நாயகன்)... பாலியல் தொழிலாளி சரோஜவாக அனுஷ்க்ஹா ஷெட்டி (விதவிதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, பாராட்டை குவித்து வரும் முன்னணி நடிகை), பாப் ஸ்டாராக விவேகாக மனோஜ் குமார் மற்றும் படத்தின் முக்கிய உயிர்நாடியாக வரும் ஒரு வயதானவர், இவர்களை இணைத்து தான் வேதம் படத்தின் கதை..

இவர்கள் அனைவருமே தெலுங்கு திரை உலகின் முக்கிய பரபரப்புகள், கூடவே கீரவாணியின் இசையில் நம்பிக்கை இளம் இயக்குனர்களில் ஒருவரான ராதா கிருஷ்ணா ஜகர்லாமுடி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆந்திராவில் வேதம் திரைப்படம், இந்த கோடையில் பெரிதாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரை முன்னோட்ட காட்சிகள்..

Wednesday, January 13, 2010

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்








Related Posts with Thumbnails