Wednesday, January 07, 2009

என் காதல் டூயட்..பூங்கற்றிலே!

எனக்கு பிடித்த விஷயங்களில் பாடுவதும் ஒன்று! Don Boscoவில் படித்ததில் முதற்கொண்டு காலேஜ் வரை மேடையில் பாடி வந்தேன். பலர் பாராட்டிய பாடகனாக அல்ல!.. பலர் ரசித்த பாடகனாக!


ஹிந்தி Dil se படத்தில் ai ajanbi பாடல்

இசைஞானி இளையராஜாவின் குரலை அப்படியே பிரதி எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடங்கினேன் பாடுவதை, அதற்கு காரணம் என் உயிர் நண்பன் ராமலிங்கம்(என்னை காட்டிலும் பாடுவதில் திறமைசாலி). அவன் பாடுவதை ரசித்து பார்த்து பாட அரம்பித்ததுதான்!

நான் இசைஞானியின் குரலில் பாடிய என் மனதுக்கும் பிடித்த, பலரும் என்னை ரசித்த பாடல்கள் என்றால்..அவை ..

அவதாரத்தில்.. தென்றல் வந்து தீண்டும் போது!
தேவர்மகனில்.. இஞ்சி இடுப்பழகே!
மன்னனில்... அம்மா என்றழைக்காத!
நாயகனில்.. நில அது வந்து மேலே!
காதலுக்கு மரியாதையில்.. என்னை தாலாட்ட வருவாளா!

கடைசியாக
என்னில் இணைந்த பாடல் என்றால்.. பூங்கற்றிலே! உயிரே படத்திலிருந்து!

இசைஞானியின் பரம வெறியனாக இருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக ரஹ்மானை ரசிக ஆரம்பித்தது அப்போது தான்!

காரணம் காதல்!

எல்லோருக்கும் (குறிப்பாக காதலர்களுக்கு) ஒரு காதல் டூயட் கண்டிப்பாக இருக்கும். நூற்றுக்கு 90% சதவிகிதம் சந்தோஷமான பாடல்களை மனதில் தேர்தெடுத்து கனவிலே டூயட் பாடியிருப்பார்கள். நானும் அப்படி தான்..

என் காதல் டூயட் பூங்கற்றிலே!


தமிழ் உயிரே படத்தில் பூங்கற்றிலே பாடல்!

எனக்கு என்னவோ தெரியவில்லை காதல் ஒருவனை வந்தடையாத வேதனையை சொல்லும் இந்த பாடல் தான் ஆரம்பம் முதலே என்னை 'பற்றி'க்கொண்டது. வேதனையும் காதலில் சுகம் தானே!

இன்னும் எனக்கு நினைவிருக்கிறது..

இரண்டாம் ஆண்டு கல்லூரி இறுதியில் நடந்த culturalசில் எல்லோரும் இசை இல்லாமல் வெறும் குரலில் பாடிய நேரத்தில், நான் உயிரே படத்தின் ஒரிஜினல் மைனஸ்(karokae) trackக்கு, பூங்காற்றிலே பாட்டை தமிழிலும் ஹிந்தியிலும் கலந்து பாடினேன்!

காதல் வேதனையின் தன்மையை ஜாவேத் அக்தரும், வைரமுத்துவும் எழுதிய வரிகளில் ஹிந்தியில் ai ajanbiயை பாடிய உதித் நாராயணனும், தமிழில் பூங்கற்றிலேவை பாடிய உன்னி மேனனும் அந்தந்த மொழி பாடலில் வாழ்ந்தே இருப்பார்கள்! அவர்களை போல் இல்லையென்றாலும் நான் என் காதலை என் பாணியிலேயே வெளிபடுத்தினேன்!

பாடலை பாடப்பாட எல்லோரையும் கவனித்துக்கொண்டே குறிப்பாக மகேசன் அய்யா, தமிழ்குமார், செல்வின், கபீர், பிரகாஷ், செல்வகுமார் மற்றும் ஜூனியர் நண்பர்கள் என எல்லோரின் முகத்திலும் வெளிப்பட்ட சந்தோஷ சபாஷ்களுடையே..அந்த கொஞ்ச நேரம்..அந்த வேதனையில் நானும் வாழ்தேன் என்று தான் சொல்ல வேண்டும்!

எல்லா கலைஞர்களும் எதிர்பார்க்கும் ஒரே அவார்ட்.. கைதட்டல்! எனக்கும் நிறையவே கிடைத்தது! கூடுதலாக என் காதலியின் கண்களிலே கண்ணிர்! எனக்கு கிடைத்த அல்ல என் காதலுக்கு கிடைத்த மிக பெரிய அவார்ட் அது தான்..
அந்த நேரம் காதல் இருந்தும் நாங்கள் இருவரும் காதலை நேரடியாக பகிர்ந்துக்கொள்ளாத தருணம்!

பிறகு காதலால் சேர்ந்தாலும், சமுதாயத்தால் பிரிக்கப்பட்டது எங்கள் காதல்! அதற்கு என் காதலியின் மீது எந்த தவறுமில்லை! அவள் எனக்கு கிடைக்காதது என்பது நான் கொடுத்து வைக்காதது என்பது மட்டும் தான் காலம் எனக்கு கொடுத்த நீங்கா வேதனை!

எது நடந்து விட்டாலும், எது இருந்தாலும் இன்றும் அவளுக்கும் , எனக்கும் மறக்க முடியாதது பூங்காற்றிலே பாட்டு!

இப்போது காதலியும் இல்லை
அந்த காதலும் இல்லை

ஆனால்

உயிரை வேரோடு கிள்ளி..
என்னை செந்தீயில் தள்ளி..
எங்கே சென்றாயோ கள்ளி?
ஓ! என் ஜீவம் ஓயுமுன்னே.. ஓடோடி வா!

என்ற வரிகளில் உணர்வுகளின் உச்சிக்கே சென்ற
நினைவுகள் இன்னும் இருக்கிறது
கண்டிப்பாக இந்த சராசரிக்கும்!
..நினைவிருக்கும் வரை!

கண்ணீருடன்.. ஒரு idiot!

1 comment:

  1. எனக்கும் நம் பழைய நினைவலைகளை கிளரிவிட்டதிற்கு நன்றி.நீ அங்கு பாடும் வரையில் கூச்சல் போட்டு கொண்டிருந்த மாணவர்கள் நீ பாட ஆரம்பித்ததும் எல்லோரும் அமைதியானார்கள்.அது நீ உன் நண்பர்களான எங்களுக்கு குடுத்த சின்ன மதிப்பு என்றே சொல்லலாம்.ஆனால் அதற்குள் ஒரு காதலே தாண்டவம் ஆடி இருக்கிறது என்று எனக்கு இன்று தான் தெரியும்.காதலை போன்ற ஒரு நல்ல ஆசிரியர் வேறு எதுவும் இல்லை.

    தமிழ்
    (thamizhaa.wordpress.காம்)

    ReplyDelete

Related Posts with Thumbnails