Thursday, November 11, 2010
Anushka as (Telugu Chandramughi2) - Nagavalli
Monday, October 18, 2010
Friday, May 21, 2010
Vedham_Telugu_moviePreview

அகிராவின் குரோசவாவின் பட ஸ்டைலில் ஒரு தெலுங்கு படம் வரவிருக்கிறது.. ஐந்து கதைகள் ஒரு பிரச்சனையை நோக்கி பயணிக்கிறதாம் 'வேதம்' திரைப்படம்... பிரபல இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பை, கேபிள் ராஜாவாக அல்லு அர்ஜுன்( அதிவேகமாக முன்னேறி வரும் இளம் நாயகன்)... பாலியல் தொழிலாளி சரோஜவாக அனுஷ்க்ஹா ஷெட்டி (விதவிதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, பாராட்டை குவித்து வரும் முன்னணி நடிகை), பாப் ஸ்டாராக விவேகாக மனோஜ் குமார் மற்றும் படத்தின் முக்கிய உயிர்நாடியாக வரும் ஒரு வயதானவர், இவர்களை இணைத்து தான் வேதம் படத்தின் கதை..
இவர்கள் அனைவருமே தெலுங்கு திரை உலகின் முக்கிய பரபரப்புகள், கூடவே கீரவாணியின் இசையில் நம்பிக்கை இளம் இயக்குனர்களில் ஒருவரான ராதா கிருஷ்ணா ஜகர்லாமுடி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆந்திராவில் வேதம் திரைப்படம், இந்த கோடையில் பெரிதாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரை முன்னோட்ட காட்சிகள்..
Saturday, November 07, 2009
Saturday, October 24, 2009
New Hindi Trailors..
"குர்பான்"

கரீனா கபூர், ஸைப் அலிகான் ஜோடியுடன் விவேக் ஒபொராய் நடித்து விரைவில் வர இருக்கும் குர்பான் படத்தின் trailor.. என்னை சமீபத்தில் ஈர்த்த ஒரு போஸ்டர் இந்த படத்துனுடையது தான்..
Ameer's Yogi Preview
Goa trailor
Go என்பது முன் வார்த்தை தான், வா என்பது பின் வார்த்தை தான்..
Go என்பது துன்பங்களை, வா என்பது இன்பங்களை..
ஜாலியான கருத்து செறிவு [:D]!!
Saturday, February 14, 2009
Sarvam..Trailor (Tamil)..
விஷ்ணுவர்தன் யுவன் கூட்டணியில் மீண்டும் ஆர்யா நடித்து வெளிவர இருக்கும் சர்வம் படத்தின் trailor..
Wednesday, January 28, 2009
பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை படியிங்கள்!
![]() |
கோல்டன் குலோப்பின் அயல் சினிமாவின் விருதையும் பெற்று ஆஸ்காரின் வாசலில் நின்று உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டுயிருக்கும் இன்னொரு படம் "வால்ஸ் வித் பஷிர் (waltz with bashir)" எனும் இஸ்ரேலிய மொழி திரைப்படம்.இதன் சிறப்பு உலகிலேயே முதல் முறையாக வந்து இருக்கும் அனிமேஷன் ஆவணப் படம் என்பது.
இஸ்ரேலிய போர் வீரரான அரி போல்மேன் இயக்கியிருக்கும் வால்ஸ் வித் பஷிரில், இஸ்ரேலின் ஆதரவுடன், மேற்கு லெபனோனில் 1980 களில் நடந்தேறிய சப்ரா சாட்திலா கொலைவெறி தாக்குதலுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று தனது மறந்து போன அந்த கொடூர அனுபவத்தை நினைவு கொள்ள, போரில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்களை தேடி செல்கிறார் அரி போல்மேன்..என ஆரம்பிக்கிறது இந்த திரைப்படம்.
BBCயின் தகவலின் படி செப்டம்பர் 16முதல்18, 1982 வரை மேற்கு லெபனோனில் இஸ்ரேலிய படையின் கண்காணிப்பில் அடைக்கலம் கொடுக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் சுமார் 800 பேர்கள் சப்ரா மற்றும் சாட்திலா இடங்களில் கிறிஸ்துவ பாலங்கிஸ்ட் குழுவால் கொடூரமாக கொல்ல ப்பட்டனர்.
சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு முன் லெபனோன் நாட்டு தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த இஸ்ரேலிய ஆதரவு கிறிஸ்துவ பாலங்கிஸ்டின் தலைவர் பஷிர் ஜெம்மையில் பாலஸ்தீனர்களால் கொள்ளப்பட்டார். அதற்கு பழிவாங்கவே இந்த கொலைவெறி தாக்குதலுக்கு இஸ்ரேல் முழுமையாக ஆதரவு அளித்து என்றும் தெரிவிக்கிறது.
மறந்து போன இந்த சம்பவம் தன் கனவில் வந்து போவதை உணர்ந்த அரி போல்மேன், அதனின் உண்மையை அறிய லெபனோனின் மேற்கு மீரூட்டுக்கு செல்கிறார். அங்கு போரில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்களையும், மனதத்துவ நிபுணர் ஒருவரையும் மேலும் ரான் பென் யிஸ்காய் எனும் பத்திரிகையாளர் ஒருவரையும் சந்தித்து உரையாடி உண்மையை கண்டறிவது தான் மீதி கதை.
கலை இயக்குனர் டேவிட் போலன்ஸ்கீ, அனிமேஷன் இயக்குனர் யோனி குட்மேன் மற்றும் இசையமைத்த மாக்ஸ் ரிசெர் ஆகிய மூவரும் அரி போல்மேனுடன் இத்திரைபடத்திற்காக நான்கு வருடம் உழைதிருக்கின்றனர். முதலில் 90 நிமிடத்திற்கான படத்தை எடுத்துக்கொண்டு, பிறகு ரோடோஸ்கோபி முறையில் திரைக்கதைக்கேற்ப அதனை 2300 வரைபடங்களாக பிரித்து காமிக் கதபாத்திரங்களுக்கான நகர்வை Flash, 3D போன்ற தொழில்நுட்பங்களின் துணையுடன் திரை சுருளிலேயே வரைந்துள்ளனர்.
அனிமேஷன் படம் தானே என்று பார்வையாளர்களும் அலட்சியமாக கருதாமல் காட்சிகளில் ஒன்றி வரலாற்றின் உண்மைகளுடன் ஆராய தூண்டுவது படத்தின் பெரிய வெற்றி. மேலும் உண்மை சூழலில் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் கதைகேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவது, வந்த ஏனைய காமிக்ஸ் திரைப்படங்களை காட்டிலும் புதுமையாகவும் உணர்வுபூர்வமாகவும் உள்ளதை உணர முடிகிறது என தர டிக்கெட் தெரிவிக்கிறார்.
நான் கடன் வாங்கிய பக்கம்..rasanaikaaran.wordpress.com
Monday, January 19, 2009
பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை படியிங்கள்!
![]() |
கலைஞனுக்கு ஜாதி, மொழி, நாடு என்று எந்த அடையாளமும் கிடையாது.. வாழ்க்கை பயணத்தில் தான் பார்த்த அழகான அல்லது அழுக்கான விஷயங்களை, தன் கலை வல்லமையின் வாயிலாக கட்டாயம் பதிவு செய்து காலத்திடம் ஒப்படைத்து விடுவான், அவன் ஒரு கட்டத்தில் நின்றுவிட்டாலும்.. அவன் கலை தொடர்ந்து பயணித்து கொண்டே இருக்கும் காலத்தின் பதிவுகளில்.
அப்படி மலர்ந்து வரும் வல்லரசு இந்தியாவின் இன்னும் வளராத ஒரு தாழ்வான பக்கத்தினை இந்தியரான விகாஸ் ஸ்வருப், தன் எழுத்துகளால் பதிவு செய்த Q&A எனும் நாவலை பிரிட்டனின் பிரபல இயங்குனர் டேனி பாயல் அழகாவே Slumdog Millionare ராக படம் பித்து, உலகின் கவனத்தை ஈர்த்து விட்டார் என்று சொல்லியே ஆகா வேண்டும். Fox Searchlight Pictures தாயரித்த இந்த ஆங்கில படம் தற்போது உலக சினிமா அவார்டுகளை அள்ளிக்கொண்டு இருக்கிறது!
![]() |
அதை விட்டு விட்டு, அவர்கள் போட்டு கொடுத்த கலை தடத்தை பயன்படுத்தி நம்மவர்கள் முயற்சி செய்தால், இன்று கமர்ஷியல் சினிமாக்களில் மட்டும் கொடிகட்டி பறக்கும் நமது சினிமா, நாளை ஈரானிய சினிமாவுக்கு போட்டியாக இந்திய சினிமா உலக சினிமாவை அதிர வைக்கும் என்பது நிகழ கூடிய உண்மை.
கதை..
இந்தியாவில் நம் எல்லோருக்கும் பரிச்சயமான கோன் பநேகா க்ரோர்பதி ( Who wants to be a millionare? ) நிகழ்ச்சியில் பங்கேற்க்கும் ஜமால் என்கின்ற மும்பை சேரி வாழ் இளைஞன், எவ்வாறு போட்டியின் ஒவ்வொரு கடினமான கேள்விகளுக்கும், தன் வாழ்கையில் நடந்த நிகழ்வுகளை தொடர்புடுத்தி, அதனுள் எதிர்பாராமல் ஒளிந்திருந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்தி பதில் அளிக்கிறான் என்பது தான்.
![]() |
ஒரு கட்டத்தில் கால் சென்டரில் டி வாங்கி கொடுக்கும் வேலை பார்ப்பதாக சொல்லிக்கொள்ளும் ஜமால், எவ்வாறு எல்லா கேள்விக்கும் எளிதாக பதில் அளித்து கொண்டு இருக்கிறானே?.. எதோ ஏமாற்று வேலை நடக்கிறது! என்கிற சந்தேகத்தில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரேம் குமார் (அனில் கபூர் ), கடைசி கேள்விக்கு பதிலளிக்கும் முன் காவல் துறைக்கு விஷயத்தை தெரியப்படுத்துக்கிறார். இந்திய காவல்துறை வந்து.. எவ்வாறு விசாரிக்கும் என்று தான் அனைவருக்கும் தெரியுமே. காவல் துறை அதிகாரியாக வரும் இர்பான் கான் தன் கடமையை தவறாமல் செய்கிறார். அவர் ஜமாலுக்கு கொடுக்கும் third டிகிரி கொடுமைகள் நமக்கு ஷாக் அடித்து வலிக்கிறது.
![]() |
விசாரணை முடிந்து, குற்றவாளியில்லை என நிரூபணமாகி, மீண்டும் நிகழ்ச்சியின் கடைசி கேள்விக்கு பதில் அளிக்க வருகையில் … கடைகள் …வீடுகள்…பரபரக்கும் வீதியென ..மும்பை நகரமே மட்டுமல்லாது இந்தியாவே டிவி முன் சரண் அடைந்து நிற்கிறது… டிராபிக் சிக்னலில் ஜமால் காவல்துறை ஜீப்பில் அமர்ந்து இருப்பதை கண்டு அவனின் சமுதாய அடையாளங்களான சேரி மக்கள் “உன்னால் முடியும்,ஜமால்”, என ஆசிர்வதிக்கும் காட்சியை பார்க்கும் போது நம் கண்களும் நனைகிறது. சபாஷ்! டைரக்டர் சார்!
மூன்று பருவங்களை முன்னுருத்தி கதை நகர்வதால் அதற்கான வயதிலேயே சிறுவர்களையும் சிறுமிகளையும் மற்றும் நடிகர் நடிகையையும் தேர்ந்தெடுத்து நடிக்கவைத்திருக்கிறார்கள்.
![]() |
![]() |
அதே போன்று லத்திகாவாய் வரும் பெண்கள் ருபினா அலி, தன்வி கணேஷ், பிரெய்தா பின்டோ மூவரும் தங்கள் சூழ்நிலைகளுக்கு கைதியாகி ஒவ்வோறு முறையும் சிதைந்து மீண்டு வெளிவரும் இடங்களில் நம்மை பரிதவிக்க வைத்திருகிறார்கள் .
அடுத்து அண்ணன் சலீம் மாக வரும் சிறுவர்களும், நடிகரும்(அஸாருதின் முகமத், அஷுடோஷ், மதுர் மித்தல்) சின்ன வயதிலேயே வில்லத்தனமும், அசட்டு சிரிப்புடன் செய்யும் கலவாணித்தனமும், பேராசையும், கிரோத மும் பிறகு பாசத்துடன் தம்பியுடன் லத்திகாவை சேர்க்கும் தருணங்களில்லும் அசத்தி விட்டனர். படத்தில் சிறு காட்சிகலாயினும் வந்து போன அனைத்து நடிகர்களும் அவ்வாறே!
இசை ஏ. ஆர். ரஹ்மான்.. மேற்கத்தியவர்கள் தான் டார்கேட் என்பதால் அவர்களுக்கு பிடிக்கும் வண்ணம், மனுஷன் மேற்கத்திய hiphopping இசையோடு சம்பிரதயதுக்காக இந்திய மற்றும் பாரசீக இசையையும் கலந்தடித்து கவரத்தான் செய்கிறார். படத்தின் காட்சியமைப்புகள் காண்டிட் ஸ்டைலில் ஆண்டனி டொட் மென்ட்லின் ஒளிப்பதிவு பயணிப்பதால் அவருக்கு அதிகம் வேலை கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. ரஹ்மானை விட இதில் மியா இசையமைத்த Paper Planes மற்றும் ஒ சாயா பாடலும் தான் மேற்கத்தியவர்களிடம் அதிகமாக கவரப்படுள்ளது. ரஹ்மானை பொறுத்தவரை மொசம்-எஸ்கேப் இசையில் மெதுவாக மெருகேறி அதிக தாள தட்டில் சிதார் இசை தப்பிப்பது போன்ற இசை சேர்ப்பு அருமை, கடைசியாக படத்தில் வரும் ஜெய் ஹோ! பாடல் யாரையும் ஆட்டம் போட வைத்துவிடும்.
SlumDog Millionare..
திரைக்கதையின் பயணமும்…அதனை பதிந்த விதமும் பார்வையாளர்களை பதப்பதைக்கும் மனதோடு சீட்டின் நுனியில் கனத்த மனதுடன் அமர வைத்து விடுக்கிறது..
![]() |
மனிதனின் நினைவுகள்..எப்போதும் இழப்புகளை மிக ஆழமாக பதிவு செய்துவிடும் என்ற இயற்கையின் எதார்த்தத்தை தாண்டி, தன் வழக்கமான ஹாப்பி எண்டிங் பார்முலாவை மீண்டும் பயன்படுத்தி மிக ஆழமாக..எதார்த்தமாக.. அழகாக ஞாபகமாக்குகிறார் இயக்குனர் டேனி பாயல் என்று அட்டகாசமாய் வாழ்த்துகிறார் நம் தர டிக்கெட் SlumDog Millionare படம் முடிந்து வெளியே வரும்போது!
பார்த்தேன்! ரசித்தேன்!!

அருந்ததி..பழங்கால முன் ஜென்மம் பழிவாங்குதல் கதை தான் என்றாலும், Firefly நிறுவனம் பணியாற்றிய படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாக தகவல்! ஆந்திராவில் குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்து வருகின்றனர்...விரைவில் தமிழிலும் வெளியாக உள்ளது.
அருந்ததி..trailor உங்கள் பார்வைக்கு!
முக்கியமான விஷயம் என்னன்னா....இந்த படத்துக்கு விளம்பரம் கொடுக்க இந்த trailor-ரை போடல.. காரணம் ஒன்னு தான்...செல்லம் அனுஷ்கா தான்..







