Friday, January 30, 2009
Endhiran, The Robot Xclusive
My favourite Commercials..என்னை கவர்ந்த விளம்பரங்கள்
என் ஆசை மகளுக்கு இவ்வாறு கண்டிப்பாக ஒரு அழகான பரிசு என் வாழ்கையில் தருவேன்..அது நிச்சயம்!
எனக்கு வயதாகி விட்டது என நான் உணர்ந்தது, இது போன்ற ஒரு தருணத்தில் தான்!
கண்டிப்பாக என் மகள் இப்படி என்னை ஏமாற்ற வைப்பு இருக்கிறது!
ஆட்டமாடிய வாழ்கை இருந்தது...ஆட்டமாடபோகும் வாழ்கை..?
என் சுட்டிமகளை, பின்தொடரும் இந்த குட்டி நாயைபோல நானும் ஒரு நாள்..
Wednesday, January 28, 2009
Dabboo Ratnani's Calender 2009 | தபு ரத்னானியின் 2009 காலேண்டர்

ஷாருக் கான் (Sharukh Khan), கஜோல் Kajol,அமிதாப் பச்சன்(Amitaab Bachan), இஷா தியோல் (Esha Deol),ஹ்ரித்திக் ரோஷன் (Hrithik Roshan), ஐஸ்வர்யா பச்சன் (Aishwarya Bachan),ப்ரீத்தி ஜிந்தா (Preethi Zinda) , பாபி தியோல் (Bobby Deol),விவேக் ஒபோராய் (vivek oberoi), ராணி முக்கர்ஜி (Rani Mukherji),அபிஷேக் பச்சன்(Abisheik Bachan), இஷா கோபிகர் (Isha Gopikar),கங்கனா ரனுட் (Kangana Ranaut) , ஷாஹீத் கபூர் (Shahid Kapoor),அஜய் தேவகன்(Ajay Devagan), தீபிகா படுகோன்(Deepika Padukone),கரீனா கபூர்(Kareena kapoor), அக்ஷய் குமார் (Akshya Kumar),கத்ரினா கைப் (Katrina Kaif), சைப் அலி கான்(Saif Ali Khan),சஞ்சய் தத் (Sanjay Dutt), பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra),ரிதேஷ் தேஷ்முக் (Ritesh Deshmukh), பிபாஷா பாசு (Bipasha Basu), இம்ரான் ஹஷ்மி (Emraan Hashmi), ரியா சென் (Riya Sen),அமிஷா படேல் (Amisha Patel), குணால் கபூர் (Kunaal kapoor),அம்ரிதா அரோரா (Amrita Arora), ஹர்மன் பவேஜா (Harman Baweja), மல்லிகா ஷெரவத் (Mallika Sherawat), ரன்பீர் கபூர் (Ranbir kapoor),சோனம் கபூர் (Sonam Kapoor), நீல் முகேஷ் (Neil Mukesh),டினோ மோரியா (Dino morea), லாரா தத்தா ( Lara Dutta), ஆயிஷா தகியா (Ayesha Takia) ,சுனில் ஷெட்டி (Sunil Shetty),ஜியா கான் (Zia Khan), துஷார் கபூர் (Tushar Kapoor),ஜான் ஆப்ரஹம் (John Abraham), ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty),வித்யா பாலன் (Vidhya Balan), சல்மான் கான் (Salman Khan),சுஷ்மித்தா சென் (Sushmita Sen), அர்ஜுன் ரம்பால் (Arjun Rampal),பர்தீன் கான் (Fardeen Khan), ஊர்மிளா மடோண்ட்கர் (Urmila Matondkar)
பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை படியிங்கள்!
![]() |
கோல்டன் குலோப்பின் அயல் சினிமாவின் விருதையும் பெற்று ஆஸ்காரின் வாசலில் நின்று உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டுயிருக்கும் இன்னொரு படம் "வால்ஸ் வித் பஷிர் (waltz with bashir)" எனும் இஸ்ரேலிய மொழி திரைப்படம்.இதன் சிறப்பு உலகிலேயே முதல் முறையாக வந்து இருக்கும் அனிமேஷன் ஆவணப் படம் என்பது.
இஸ்ரேலிய போர் வீரரான அரி போல்மேன் இயக்கியிருக்கும் வால்ஸ் வித் பஷிரில், இஸ்ரேலின் ஆதரவுடன், மேற்கு லெபனோனில் 1980 களில் நடந்தேறிய சப்ரா சாட்திலா கொலைவெறி தாக்குதலுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று தனது மறந்து போன அந்த கொடூர அனுபவத்தை நினைவு கொள்ள, போரில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்களை தேடி செல்கிறார் அரி போல்மேன்..என ஆரம்பிக்கிறது இந்த திரைப்படம்.
BBCயின் தகவலின் படி செப்டம்பர் 16முதல்18, 1982 வரை மேற்கு லெபனோனில் இஸ்ரேலிய படையின் கண்காணிப்பில் அடைக்கலம் கொடுக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் சுமார் 800 பேர்கள் சப்ரா மற்றும் சாட்திலா இடங்களில் கிறிஸ்துவ பாலங்கிஸ்ட் குழுவால் கொடூரமாக கொல்ல ப்பட்டனர்.
சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு முன் லெபனோன் நாட்டு தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த இஸ்ரேலிய ஆதரவு கிறிஸ்துவ பாலங்கிஸ்டின் தலைவர் பஷிர் ஜெம்மையில் பாலஸ்தீனர்களால் கொள்ளப்பட்டார். அதற்கு பழிவாங்கவே இந்த கொலைவெறி தாக்குதலுக்கு இஸ்ரேல் முழுமையாக ஆதரவு அளித்து என்றும் தெரிவிக்கிறது.
மறந்து போன இந்த சம்பவம் தன் கனவில் வந்து போவதை உணர்ந்த அரி போல்மேன், அதனின் உண்மையை அறிய லெபனோனின் மேற்கு மீரூட்டுக்கு செல்கிறார். அங்கு போரில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்களையும், மனதத்துவ நிபுணர் ஒருவரையும் மேலும் ரான் பென் யிஸ்காய் எனும் பத்திரிகையாளர் ஒருவரையும் சந்தித்து உரையாடி உண்மையை கண்டறிவது தான் மீதி கதை.
கலை இயக்குனர் டேவிட் போலன்ஸ்கீ, அனிமேஷன் இயக்குனர் யோனி குட்மேன் மற்றும் இசையமைத்த மாக்ஸ் ரிசெர் ஆகிய மூவரும் அரி போல்மேனுடன் இத்திரைபடத்திற்காக நான்கு வருடம் உழைதிருக்கின்றனர். முதலில் 90 நிமிடத்திற்கான படத்தை எடுத்துக்கொண்டு, பிறகு ரோடோஸ்கோபி முறையில் திரைக்கதைக்கேற்ப அதனை 2300 வரைபடங்களாக பிரித்து காமிக் கதபாத்திரங்களுக்கான நகர்வை Flash, 3D போன்ற தொழில்நுட்பங்களின் துணையுடன் திரை சுருளிலேயே வரைந்துள்ளனர்.
அனிமேஷன் படம் தானே என்று பார்வையாளர்களும் அலட்சியமாக கருதாமல் காட்சிகளில் ஒன்றி வரலாற்றின் உண்மைகளுடன் ஆராய தூண்டுவது படத்தின் பெரிய வெற்றி. மேலும் உண்மை சூழலில் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் கதைகேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவது, வந்த ஏனைய காமிக்ஸ் திரைப்படங்களை காட்டிலும் புதுமையாகவும் உணர்வுபூர்வமாகவும் உள்ளதை உணர முடிகிறது என தர டிக்கெட் தெரிவிக்கிறார்.
நான் கடன் வாங்கிய பக்கம்..rasanaikaaran.wordpress.com
Tuesday, January 27, 2009
Superstar Rajinikanth's Endhiran's working stills..|சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் படத்தின் புகைப்படங்கள்..
Tuesday, January 20, 2009
دہلی |தில்லி|दहली 6..trailorகளும் பாடல்களும்..
நான் தில்லியில் இருந்தபோது அடிக்கடி சுற்றி திரிந்த இடங்கள் பராட்டா வாளி கலி.. சாந்தினி சோவ்க்..ஜம்மா மஸ்ஜித்..Connaught Place..இந்தியா கேட் என நான் ரசித்த என் தலைநகரம் தில்லி.. என் எதிர்கால லட்சியமும் தில்லி தான்..தில்லி 6 காட்சிகளில்..
trailor1
trailor2
பாடல்கள்..
Delhi 6
Monday, January 19, 2009
பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை படியிங்கள்!
![]() |
கலைஞனுக்கு ஜாதி, மொழி, நாடு என்று எந்த அடையாளமும் கிடையாது.. வாழ்க்கை பயணத்தில் தான் பார்த்த அழகான அல்லது அழுக்கான விஷயங்களை, தன் கலை வல்லமையின் வாயிலாக கட்டாயம் பதிவு செய்து காலத்திடம் ஒப்படைத்து விடுவான், அவன் ஒரு கட்டத்தில் நின்றுவிட்டாலும்.. அவன் கலை தொடர்ந்து பயணித்து கொண்டே இருக்கும் காலத்தின் பதிவுகளில்.
அப்படி மலர்ந்து வரும் வல்லரசு இந்தியாவின் இன்னும் வளராத ஒரு தாழ்வான பக்கத்தினை இந்தியரான விகாஸ் ஸ்வருப், தன் எழுத்துகளால் பதிவு செய்த Q&A எனும் நாவலை பிரிட்டனின் பிரபல இயங்குனர் டேனி பாயல் அழகாவே Slumdog Millionare ராக படம் பித்து, உலகின் கவனத்தை ஈர்த்து விட்டார் என்று சொல்லியே ஆகா வேண்டும். Fox Searchlight Pictures தாயரித்த இந்த ஆங்கில படம் தற்போது உலக சினிமா அவார்டுகளை அள்ளிக்கொண்டு இருக்கிறது!
![]() |
அதை விட்டு விட்டு, அவர்கள் போட்டு கொடுத்த கலை தடத்தை பயன்படுத்தி நம்மவர்கள் முயற்சி செய்தால், இன்று கமர்ஷியல் சினிமாக்களில் மட்டும் கொடிகட்டி பறக்கும் நமது சினிமா, நாளை ஈரானிய சினிமாவுக்கு போட்டியாக இந்திய சினிமா உலக சினிமாவை அதிர வைக்கும் என்பது நிகழ கூடிய உண்மை.
கதை..
இந்தியாவில் நம் எல்லோருக்கும் பரிச்சயமான கோன் பநேகா க்ரோர்பதி ( Who wants to be a millionare? ) நிகழ்ச்சியில் பங்கேற்க்கும் ஜமால் என்கின்ற மும்பை சேரி வாழ் இளைஞன், எவ்வாறு போட்டியின் ஒவ்வொரு கடினமான கேள்விகளுக்கும், தன் வாழ்கையில் நடந்த நிகழ்வுகளை தொடர்புடுத்தி, அதனுள் எதிர்பாராமல் ஒளிந்திருந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்தி பதில் அளிக்கிறான் என்பது தான்.
![]() |
ஒரு கட்டத்தில் கால் சென்டரில் டி வாங்கி கொடுக்கும் வேலை பார்ப்பதாக சொல்லிக்கொள்ளும் ஜமால், எவ்வாறு எல்லா கேள்விக்கும் எளிதாக பதில் அளித்து கொண்டு இருக்கிறானே?.. எதோ ஏமாற்று வேலை நடக்கிறது! என்கிற சந்தேகத்தில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரேம் குமார் (அனில் கபூர் ), கடைசி கேள்விக்கு பதிலளிக்கும் முன் காவல் துறைக்கு விஷயத்தை தெரியப்படுத்துக்கிறார். இந்திய காவல்துறை வந்து.. எவ்வாறு விசாரிக்கும் என்று தான் அனைவருக்கும் தெரியுமே. காவல் துறை அதிகாரியாக வரும் இர்பான் கான் தன் கடமையை தவறாமல் செய்கிறார். அவர் ஜமாலுக்கு கொடுக்கும் third டிகிரி கொடுமைகள் நமக்கு ஷாக் அடித்து வலிக்கிறது.
![]() |
விசாரணை முடிந்து, குற்றவாளியில்லை என நிரூபணமாகி, மீண்டும் நிகழ்ச்சியின் கடைசி கேள்விக்கு பதில் அளிக்க வருகையில் … கடைகள் …வீடுகள்…பரபரக்கும் வீதியென ..மும்பை நகரமே மட்டுமல்லாது இந்தியாவே டிவி முன் சரண் அடைந்து நிற்கிறது… டிராபிக் சிக்னலில் ஜமால் காவல்துறை ஜீப்பில் அமர்ந்து இருப்பதை கண்டு அவனின் சமுதாய அடையாளங்களான சேரி மக்கள் “உன்னால் முடியும்,ஜமால்”, என ஆசிர்வதிக்கும் காட்சியை பார்க்கும் போது நம் கண்களும் நனைகிறது. சபாஷ்! டைரக்டர் சார்!
மூன்று பருவங்களை முன்னுருத்தி கதை நகர்வதால் அதற்கான வயதிலேயே சிறுவர்களையும் சிறுமிகளையும் மற்றும் நடிகர் நடிகையையும் தேர்ந்தெடுத்து நடிக்கவைத்திருக்கிறார்கள்.
![]() |
![]() |
அதே போன்று லத்திகாவாய் வரும் பெண்கள் ருபினா அலி, தன்வி கணேஷ், பிரெய்தா பின்டோ மூவரும் தங்கள் சூழ்நிலைகளுக்கு கைதியாகி ஒவ்வோறு முறையும் சிதைந்து மீண்டு வெளிவரும் இடங்களில் நம்மை பரிதவிக்க வைத்திருகிறார்கள் .
அடுத்து அண்ணன் சலீம் மாக வரும் சிறுவர்களும், நடிகரும்(அஸாருதின் முகமத், அஷுடோஷ், மதுர் மித்தல்) சின்ன வயதிலேயே வில்லத்தனமும், அசட்டு சிரிப்புடன் செய்யும் கலவாணித்தனமும், பேராசையும், கிரோத மும் பிறகு பாசத்துடன் தம்பியுடன் லத்திகாவை சேர்க்கும் தருணங்களில்லும் அசத்தி விட்டனர். படத்தில் சிறு காட்சிகலாயினும் வந்து போன அனைத்து நடிகர்களும் அவ்வாறே!
இசை ஏ. ஆர். ரஹ்மான்.. மேற்கத்தியவர்கள் தான் டார்கேட் என்பதால் அவர்களுக்கு பிடிக்கும் வண்ணம், மனுஷன் மேற்கத்திய hiphopping இசையோடு சம்பிரதயதுக்காக இந்திய மற்றும் பாரசீக இசையையும் கலந்தடித்து கவரத்தான் செய்கிறார். படத்தின் காட்சியமைப்புகள் காண்டிட் ஸ்டைலில் ஆண்டனி டொட் மென்ட்லின் ஒளிப்பதிவு பயணிப்பதால் அவருக்கு அதிகம் வேலை கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. ரஹ்மானை விட இதில் மியா இசையமைத்த Paper Planes மற்றும் ஒ சாயா பாடலும் தான் மேற்கத்தியவர்களிடம் அதிகமாக கவரப்படுள்ளது. ரஹ்மானை பொறுத்தவரை மொசம்-எஸ்கேப் இசையில் மெதுவாக மெருகேறி அதிக தாள தட்டில் சிதார் இசை தப்பிப்பது போன்ற இசை சேர்ப்பு அருமை, கடைசியாக படத்தில் வரும் ஜெய் ஹோ! பாடல் யாரையும் ஆட்டம் போட வைத்துவிடும்.
SlumDog Millionare..
திரைக்கதையின் பயணமும்…அதனை பதிந்த விதமும் பார்வையாளர்களை பதப்பதைக்கும் மனதோடு சீட்டின் நுனியில் கனத்த மனதுடன் அமர வைத்து விடுக்கிறது..
![]() |
மனிதனின் நினைவுகள்..எப்போதும் இழப்புகளை மிக ஆழமாக பதிவு செய்துவிடும் என்ற இயற்கையின் எதார்த்தத்தை தாண்டி, தன் வழக்கமான ஹாப்பி எண்டிங் பார்முலாவை மீண்டும் பயன்படுத்தி மிக ஆழமாக..எதார்த்தமாக.. அழகாக ஞாபகமாக்குகிறார் இயக்குனர் டேனி பாயல் என்று அட்டகாசமாய் வாழ்த்துகிறார் நம் தர டிக்கெட் SlumDog Millionare படம் முடிந்து வெளியே வரும்போது!
பார்த்தேன்! ரசித்தேன்!!

அருந்ததி..பழங்கால முன் ஜென்மம் பழிவாங்குதல் கதை தான் என்றாலும், Firefly நிறுவனம் பணியாற்றிய படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாக தகவல்! ஆந்திராவில் குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்து வருகின்றனர்...விரைவில் தமிழிலும் வெளியாக உள்ளது.
அருந்ததி..trailor உங்கள் பார்வைக்கு!
முக்கியமான விஷயம் என்னன்னா....இந்த படத்துக்கு விளம்பரம் கொடுக்க இந்த trailor-ரை போடல.. காரணம் ஒன்னு தான்...செல்லம் அனுஷ்கா தான்..
Thursday, January 15, 2009
என் இசை மனதில் இன்று..
Listen_Slumdog Millionare
வாழ்த்துகள் ரஹ்மான்!
Tuesday, January 13, 2009
Thursday, January 08, 2009
flickr கதைகள்
அன்புடன்,
அகத்திரை
மேலும் சுட்டவைகள்.. www.flickr.com/photos/agathirai
மசக்கலி & மேரா டெல்லி / मेरा दिल्ही in Delhi 6 teaser
Wednesday, January 07, 2009
என் காதல் டூயட்..பூங்கற்றிலே!
ஹிந்தி Dil se படத்தில் ai ajanbi பாடல்
இசைஞானி இளையராஜாவின் குரலை அப்படியே பிரதி எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடங்கினேன் பாடுவதை, அதற்கு காரணம் என் உயிர் நண்பன் ராமலிங்கம்(என்னை காட்டிலும் பாடுவதில் திறமைசாலி). அவன் பாடுவதை ரசித்து பார்த்து பாட அரம்பித்ததுதான்!
நான் இசைஞானியின் குரலில் பாடிய என் மனதுக்கும் பிடித்த, பலரும் என்னை ரசித்த பாடல்கள் என்றால்..அவை ..
அவதாரத்தில்.. தென்றல் வந்து தீண்டும் போது!
தேவர்மகனில்.. இஞ்சி இடுப்பழகே!
மன்னனில்... அம்மா என்றழைக்காத!
நாயகனில்.. நில அது வந்து மேலே!
காதலுக்கு மரியாதையில்.. என்னை தாலாட்ட வருவாளா!
கடைசியாக
என்னில் இணைந்த பாடல் என்றால்.. பூங்கற்றிலே! உயிரே படத்திலிருந்து!
இசைஞானியின் பரம வெறியனாக இருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக ரஹ்மானை ரசிக ஆரம்பித்தது அப்போது தான்!
காரணம் காதல்!
எல்லோருக்கும் (குறிப்பாக காதலர்களுக்கு) ஒரு காதல் டூயட் கண்டிப்பாக இருக்கும். நூற்றுக்கு 90% சதவிகிதம் சந்தோஷமான பாடல்களை மனதில் தேர்தெடுத்து கனவிலே டூயட் பாடியிருப்பார்கள். நானும் அப்படி தான்..
என் காதல் டூயட் பூங்கற்றிலே!
தமிழ் உயிரே படத்தில் பூங்கற்றிலே பாடல்!
எனக்கு என்னவோ தெரியவில்லை காதல் ஒருவனை வந்தடையாத வேதனையை சொல்லும் இந்த பாடல் தான் ஆரம்பம் முதலே என்னை 'பற்றி'க்கொண்டது. வேதனையும் காதலில் சுகம் தானே!
இன்னும் எனக்கு நினைவிருக்கிறது..
இரண்டாம் ஆண்டு கல்லூரி இறுதியில் நடந்த culturalசில் எல்லோரும் இசை இல்லாமல் வெறும் குரலில் பாடிய நேரத்தில், நான் உயிரே படத்தின் ஒரிஜினல் மைனஸ்(karokae) trackக்கு, பூங்காற்றிலே பாட்டை தமிழிலும் ஹிந்தியிலும் கலந்து பாடினேன்!
காதல் வேதனையின் தன்மையை ஜாவேத் அக்தரும், வைரமுத்துவும் எழுதிய வரிகளில் ஹிந்தியில் ai ajanbiயை பாடிய உதித் நாராயணனும், தமிழில் பூங்கற்றிலேவை பாடிய உன்னி மேனனும் அந்தந்த மொழி பாடலில் வாழ்ந்தே இருப்பார்கள்! அவர்களை போல் இல்லையென்றாலும் நான் என் காதலை என் பாணியிலேயே வெளிபடுத்தினேன்!
பாடலை பாடப்பாட எல்லோரையும் கவனித்துக்கொண்டே குறிப்பாக மகேசன் அய்யா, தமிழ்குமார், செல்வின், கபீர், பிரகாஷ், செல்வகுமார் மற்றும் ஜூனியர் நண்பர்கள் என எல்லோரின் முகத்திலும் வெளிப்பட்ட சந்தோஷ சபாஷ்களுடையே..அந்த கொஞ்ச நேரம்..அந்த வேதனையில் நானும் வாழ்தேன் என்று தான் சொல்ல வேண்டும்!
எல்லா கலைஞர்களும் எதிர்பார்க்கும் ஒரே அவார்ட்.. கைதட்டல்! எனக்கும் நிறையவே கிடைத்தது! கூடுதலாக என் காதலியின் கண்களிலே கண்ணிர்! எனக்கு கிடைத்த அல்ல என் காதலுக்கு கிடைத்த மிக பெரிய அவார்ட் அது தான்..
அந்த நேரம் காதல் இருந்தும் நாங்கள் இருவரும் காதலை நேரடியாக பகிர்ந்துக்கொள்ளாத தருணம்!
பிறகு காதலால் சேர்ந்தாலும், சமுதாயத்தால் பிரிக்கப்பட்டது எங்கள் காதல்! அதற்கு என் காதலியின் மீது எந்த தவறுமில்லை! அவள் எனக்கு கிடைக்காதது என்பது நான் கொடுத்து வைக்காதது என்பது மட்டும் தான் காலம் எனக்கு கொடுத்த நீங்கா வேதனை!
எது நடந்து விட்டாலும், எது இருந்தாலும் இன்றும் அவளுக்கும் , எனக்கும் மறக்க முடியாதது பூங்காற்றிலே பாட்டு!
இப்போது காதலியும் இல்லை
அந்த காதலும் இல்லை
ஆனால்
உயிரை வேரோடு கிள்ளி..
என்னை செந்தீயில் தள்ளி..
எங்கே சென்றாயோ கள்ளி?
ஓ! என் ஜீவம் ஓயுமுன்னே.. ஓடோடி வா!
என்ற வரிகளில் உணர்வுகளின் உச்சிக்கே சென்ற
நினைவுகள் இன்னும் இருக்கிறது
கண்டிப்பாக இந்த சராசரிக்கும்!
..நினைவிருக்கும் வரை!
கண்ணீருடன்.. ஒரு idiot!
Tuesday, January 06, 2009
..எழுதினேன்! ..(பதிவு எண் 6)
Saturday, January 03, 2009
பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை பாருங்கள்!
இசைஞானியின் இசைவரத்தில்..
நான் கடவுள்
திரைப்படத்தின் பிண்ணணி இசை சேர்ப்பு!
Friday, January 02, 2009
பக்கத்தில் கடன் வாங்கியது.. பரவாயில்லை படியிங்கள்!
![]() |
From rasanaikaran |
மார்க் போடுவதெல்லாம் படித்த மேதாவி மடையர்களின் வேலை..
தாயின் தாலாட்டுக்கு மார்க் போட முடியுமா என மீண்டும் உயிரெடுக்கும் உணர்வான
இளையராஜா alias இசை!
படம் .. நான் கடவுள்!
நீண்ட இடைவேளிக்கு பிறகு மனதுருக கண்கள் ஈரம் பார்க்க வைக்கும் இசை!
சாதனா சர்கம்மும், மதுமிதாவும் உயிர் தந்த அம்மா..மாத மணிக்கோயில் முதலிய இரு பாடல்களும் ஒரே உணர்வில் உருவான இசை என்றாலும் மனதை மயக்கி வேறுபடுகின்றன!
அதே போல் ஸ்ரேயா க்கோசல் பாடிய கண்ணில் பார்வையும், இசைஞானி உயிரூட்டிய ஒரு காற்றில் பாடல்களும் ஒரே இசையின் வடிவம். இசைஞானி தன் பாடகர்களுக்கு திடீரென test வைப்பாராம். அவ்வாறு இந்த கடினமான பாடலுக்கு பரிட்சை எழுதி தேர்வானவர் ஸ்ரேயா க்கோசல் என கேட்கும் போது உணரலாம்!
அருமையான பாடல்! இதே பாடல்..இசைஞானி பாடும் போது தாலாட்டுகிறது.. பெற்ற தாயின் அன்பின் உயரத்துக்கு ஈடு ஏது என உணர்த்தும்!
பிட்சை பாத்திரம்.. தன் பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார் என அரைவேக்காடுகள் கூறுகின்றன! ராஜாவின் ரமணமாலையில் வந்த பழைய பாடலும், நான் கடவுளில் மறுபிறவி எடுத்து வந்த புதிய பாடலும் இசையின் இறவா வரம்!
கடைசியாக ஓம் சிவ ஓம்!
இதை கேட்ட வடநாட்டு சாமியாரின் கண்களில் நீர் வழிந்ததாக ஆனந்த விகடனில் வெளிவந்த நான் கடவுளின் பிரத்தேயகப் பேட்டியில் படித்தேன். இந்த பாடலை கேட்ட பிறகு என் கண்களிலும் நீர் தாரையெடுத்தது பல ஆண்டுகளுக்கு பிறகு!
எதோ வார்த்தைகளில் சொல்லயியலாத பாடல்! உயிரை உலுக்குகிற இசை என மனதை சஞ்சலப்படுத்துகிறது!
அதானே இசைஞானி நமக்காக வாங்கி வந்த வரம் என மீண்டும் உணர்த்தும் நான் கடவுளின் இசை!
இப்படிக்கு..
அன்புடன்
தர டிக்கெட்!
நான் கடன் வாங்கிய பக்கம்..rasanaikaaran.wordpress.com