
என் மசாலா ரசனைகளுக்கு சிவாஜி, வாரணமாயிரம், பில்லா, போக்கிரிகள் வந்தாலும்..
உணர்வுகளை உரசும் உலக சினிமா தரவரிசையில் தமிழில் வெகு சில சினிமாக்கள் தான் வரும்..அது வெற்றிகரமாக ஓடுதோ இல்லையோ அது கண்டிப்பாக பலரை அதன் உணர்வு குவியல்களில் சிக்கவைத்து பிரமிப்பூட்டும், அதற்காகவே இது போன்ற படங்களுக்கு நான் காத்திருப்பதுண்டு.. அந்த வரிசையில்...மூன்று வருடமாக...அந்த படத்தின் தயாரிப்பாளர் மட்டுமில்லை இயக்குனர் பாலாவின் ரசிகரான நானும் தான்..
படம் : நான் கடவுள்!
என் காத்திருப்புக்கு மூன்றே மூன்று காரணங்கள் தான்..
உணர்வுகளை காட்சிகளாய் பதிவும் செய்யும் பாலாவின் இயக்கம்..
ஜெயமோகனின் ஏழாவது உலகமெனும் இலக்கிய நாவலின் ஒரு பகுதியை அவருடைய அனுமதியுடன் பாலாவே திரைகதையாய் எழுதி, அதற்கு வாசம் சேர்க்க வரும் வசனங்களை, இலக்கிய உலகின் இந்நாள் பெரிய நம்பிக்கையான ஜெயமோகனையே முதன் முதலில் திரைத்துறைக்கு அழைத்து வந்து எழுதவைத்தது!
உயிரையே மீண்டும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் இசையின் ஆதிமூலம்
இளையராஜாவின் இசை..
இங்கு மட்டுமில்லை இந்தியில் ஆமிர் கான், அபிஷேக் பட்சான் முதல் பலரும் பாலாவின் இயக்கத்தில் நடிக்க தவம் கிடக்கிறார்கள்.. அஜித்துக்கு பாலா செய்தது துரோகம் தான்.. கமல்ஹாசனின் வாரிசாக அஜித்தை இந்த படம் மாற்றி இருக்கும்.. யார் கண் பட்டதோ... ஆர்யாவுக்கு அடித்தது யோகம்.. இந்த படத்திலும், இனிமேல் நடிக்க போகும் படத்திலும் அர்யவிடமும் நடிப்பை எதிர்பார்க்கலாம்..
கதை..நாம் வாழும் இந்த சமுகத்தில் கடைசி மனிதர்களாக வாழும் .. பிட்சைக்காரர்களின் உரையவைக்கும் உலகத்தை பற்றியது தான் கதை. 'எழாவது உலகம்'..நாவல் முழுவதும் படமாக எடுக்க முடியாது...நாவலை படிக்க படிக்க கனத்து விடும் மனசு.. படித்தவர்களுக்கு நான் சொல்வது நன்கு புரியும்.அதனில் ஒரு பகுதியை கதையில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் வாயிலாக கதையை காசி(வாரனாசி)யில் ஆரம்பித்து தமிழகத்துக்கு பயணம் செய்கிறது பாலா எழுதிய நான் கடவுள். அதுவும் பாலாவின் பதிவுகளை சொல்லவே வேண்டாம் கண்டிப்பாக காட்சிக்கு காட்சி பதற வைக்கும்...
இசைஞானி படத்தை பார்த்து அழுதே விட்டாராம்.. பின்னணி இசையில் தற்போது உயிரூட்டி கொண்டு இருக்காராம்..
தேசியவிருதுகளின் இலக்கில் ...
பொங்கலுக்கு..
என் அண்ணாச்சி பாலாவின் நான் கடவுள்!
நானும் மிக ஆவலாகக் காத்திருக்கிறேன். நண்பர் ஒருவர் படத்தின் பிரிவியூ பார்த்து வந்தார் (ஜெயமோகனின் நண்பர்). அவரும் படம் மிகச் சிறப்பாக இருப்பதாகச் சொன்னார். முழுக்கதையையும் சொல்லவில்லை.
ReplyDelete